search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பிக் பாஷ் லீக் 2017-18: தொடக்க ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்சை வீழ்த்தியது சிட்னி தண்டர்
    X

    பிக் பாஷ் லீக் 2017-18: தொடக்க ஆட்டத்தில் சிட்னி சிக்ஸர்சை வீழ்த்தியது சிட்னி தண்டர்

    ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கிய பிக் பாஷ் லீக் தொடரில் முதல் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் சிட்னி தண்டர் அணி வீழ்த்தியது.
    சிட்னி:

    இந்தியாவில் ஐ.பி.எல். தொடர் நடத்தப்படுவது போல் ஆஸ்திரேலியாவில் 2017-18-க்கான பிக் பாஷ் லீக் தொடர் நேற்று தொடங்கியது. நேற்றைய முதல் லீக் போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் - சிட்னி தண்டர் அணிகள் சிட்னி மைதனாத்தில் மோதின.

    டாஸ் வென்ற சிட்னி தண்டர் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி சிட்னி சிக்ஸர்ஸ் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜேசன் ராயும், டேனியல் ஹியூசும் களமிறங்கினர். ராய் 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து நிக் மேடின்சன் களமிறங்கினார். ஹியூஸ் 29 ரன்களும், மேடின்சன் 31 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அவர்களை தொடர்ந்து வந்தவர்களில் சாம் பில்லிங்ஸ் மட்டும் சற்று நிலைத்துநின்று ஆடி அதிகபட்சமாக 32 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் ரன்குவிக்க தவரவே சிட்னி சிக்ஸர்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. மிச்செல் மெக்லெனேகன், பவாத் அகமத், அர்ஜூன் நாயர் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களும், ஆண்ட்ரூ பெக்கெட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சிட்னி தண்டர் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தொடர்ந்து கர்டிஸ் பாட்டர்சன்னுடன், ஷேன் வாட்சன் ஜோடி சேர்ந்தார். வாட்சன் அதிரடியாக விளையாட மற்றொரு முனையில் பாட்டர்சன் நிதானமாக விளையாடினார். வாட்சன் அரைசதம் அடித்தார்.
    பாட்டர்சன் 29 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய வாட்சனும் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சிட்னி தண்டர் அணி ஆட்டத்தின் இறுதி பந்தில் வெற்றி இலக்கை எட்டியது. அந்த அணி 20 ஒவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 150 ரன்கள் எடுத்து ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அர்ஜூன் நாயர் 12 ரன்களுடனும், பிளிசார்ட் 11 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சிட்னி சிக்ஸர் அணியின் பந்துவீச்சில் டேனியல் சாம்ஸ் 4 விக்கெட்களும், ஜோகன் போத்தா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அதிரடியாக விளையாடி 46 பந்துகளில் 77 ரன்கள் (6 பவுண்டரி, 6 சிக்ஸர்) அடித்த சுட்னி தண்டர் அணியின் கேப்டன் ஷேன் வாட்சன் ஆட்டநாயகன் விருது பெற்றார். இன்று நடைபெறும் போட்டியில் பிரிஸ்பேன் ஹீட் - மேர்போர்ன் ஸ்டார்ஸ் அணிகள் பலப்பரீட்சை செய்கின்றன.
    Next Story
    ×