search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் நாளை பலப்பரீட்சை
    X

    முதல் ஒருநாள் போட்டி: நியூசிலாந்து - வெஸ்ட்இண்டீஸ் நாளை பலப்பரீட்சை

    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி நாளை அதிகாலை நடக்கிறது. கெய்ல் அதிரடியை எதிர்பார்க்கிறது வெஸ்ட் இண்டீஸ்.
    வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது. இரு அணிகள் மோதிய 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அடுத்து இரு அணிகள் மோதும் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் வான்கேராயில் நாளை நடக்கிறது.

    இந்திய நேரப்படி அதிகாலை 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது. ஹோல்டர் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி டெஸ்ட் தொடரை இழந்ததால் ஒருநாள் போட்டி தொடரை கைப்பற்ற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.



    அந்த அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் இடம்பெற்று இருப்பது பலமாக கருதப்படுகிறது. கடந்த வாரம் முடிவடைந்த வங்காளதேச பிரிமீயர் லீக்கில் கிறிஸ் கெய்ல் இரண்டு சதங்கள் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×