search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் படுதோல்வி பென் ஸ்டோக்ஸைதான் அதிகம் பாதித்திருக்கும்: வாகன்
    X

    ஆஷஸ் படுதோல்வி பென் ஸ்டோக்ஸைதான் அதிகம் பாதித்திருக்கும்: வாகன்

    ஆஷஸ் தொடரை 0-3 என இழந்து பின்தங்கிய நிலையில் இருப்பது, இங்கிலாந்து அணியில் இருக்கும் வீரர்களை விட பென் ஸ்டோக்ஸைதான் அதிகம் பாதித்திருக்கும் என வாகன் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. பெர்த்தில் நடைபெற்ற டெஸ்டில் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததன் மூலம் இங்கிலாந்து 0-3 என தொடரை இழந்துள்ளது. கடைசி இரண்டு டெஸ்டிலும் தோல்வியடைந்து ஒயிட்வாஷ் ஆகிவிடுவோ? என்ற அச்சம் முன்னாள் கேப்டன்களை தொற்றிக் கொண்டுள்ளது.

    இங்கிலாந்து அணி ஆஷஸ் தொடருக்காக ஆஸ்திரேலியா புறப்படுவதற்கு முன் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான தொடரில் விளையாடியது. அப்போது இரவு விடுதி கிளப்பில் ஏற்பட்ட தகராறில் இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் வாலிபர் ஒருவரை தாக்கியதாக கைது செய்து விடுதலை செய்யப்பட்டார்.

    பென் ஸ்டோக்ஸ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதால் ஆஷஸ் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். பென் ஸ்டோக்ஸ் இல்லாததால் ஆஸ்திரேலியா கடும் சரிவை சந்தித்துள்ளதை நேராக பார்க்க முடிந்தது. பென் ஸ்டோக்ஸ் அணியில் இடம்பெறாத செய்தியை அறிந்த முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணி திணறப் போகிறது என்று அப்போது கூறியிருந்தார்.

    தற்போதும் அந்த கருத்தில் உறுதியாக இருக்கும் மைக்கேல் வாகன், இங்கிலாந்து அணியின் படுதோல்விக்காக அந்த அணியின் வீரர்கள் கவலையடைவதை விட பென் ஸ்டோக்ஸ் அதிக அளவில் கவலையடைவார் என்று கூறியுள்ளார்.



    இதுகுறித்து பென் ஸ்டோக்ஸ் கூறுகையில் ‘‘இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவில் விளையாடுவதை பென் ஸ்டோக்ஸ் பார்த்துக் கொண்டிருப்பார் என்று நான் நம்புகிறேன். இந்த படுதோல்வியால் இங்கிலாந்து அணி கவலை அடைவதைவிட பென் ஸ்டோக்ஸ் அதிக அளவில் கவலையடைவார்.

    அவரால் ஆஸ்திரேலியாவிற்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். பென் ஸ்டோக்ஸ் இல்லாமல் இங்கிலாந்து அணியால் நெருக்கடி கொடுக்க முடியும் என்று என்னால் நினைக்க முடியவில்லை. இங்கிலாந்து வீரர்களை விட அவர்தான் அதிக அளவில் கவலையடைவார்’’ என்றார்.
    Next Story
    ×