search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    4 ஆயிரம் ரன்களை கடந்தார், தவான்
    X

    4 ஆயிரம் ரன்களை கடந்தார், தவான்

    இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 62 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 6-வது வீரர் தவான் ஆவார்.
    இலங்கை வீரர் தரங்கா ஒரு நாள் போட்டியில் இந்த ஆண்டில் ஆயிரம் ரன்களை (25 ஆட்டத்தில் 1,011 ரன்) கடந்த 3-வது வீரர் என்ற சிறப்பை பெற்றார். ஏற்கனவே இந்தியாவின் விராட் கோலி (1,460 ரன்), ரோகித் சர்மா (1,293 ரன்) ஆயிரம் ரன்களை கடந்திருக்கிறார்கள்.

    இந்திய தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 62 ரன்கள் எடுத்த போது ஒரு நாள் போட்டியில் 4 ஆயிரம் ரன்களை (95-வது இன்னிங்ஸ்) கடந்தார். இந்த மைல்கல்லை அதிவேகமாக எட்டிய 6-வது வீரர் தவான் ஆவார். இந்திய அளவில் விராட் கோலிக்கு (93 இன்னிங்ஸ்) பிறகு இந்த இலக்கை வேகமாக அடைந்திருக்கிறார்.

    2017-ம் ஆண்டில் இந்திய அணியின் ஒரு நாள் போட்டி பயணம் நேற்றோடு நிறைவடைந்தது. இந்திய அணி இந்த ஆண்டில் 29 ஆட்டங்களில் பங்கேற்று 21-ல் வெற்றியும், 7-ல் தோல்வியும் கண்டுள்ளது. ஒரு ஆட்டத்தில் முடிவில்லை. இந்த ஆண்டில் அதிக வெற்றிகளை ருசித்த அணி இந்தியா தான். அதே சமயம் இலங்கை அணி 29 ஆட்டங்களில் விளையாடி 5-ல் மட்டுமே வெற்றி பெற்றிருக்கிறது.

    விசாகப்பட்டினத்தில் 7-வது ஆட்டத்தில் ஆடிய இந்தியா அதில் பதிவு செய்த 6-வது வெற்றி இதுவாகும்.

    இந்திய அணி தொடர்ச்சியாக கைப்பற்றிய 8-வது ஒரு நாள் தொடர் இதுவாகும். இரு நாடுகள் இடையிலான ஒரு நாள் தொடரை தொடர்ச்சியாக அதிக தடவை வென்ற அணி வெஸ்ட் இண்டீஸ் (14) ஆகும். அடுத்த இடத்தில் ஆஸ்திரேலியாவும், இந்தியாவும் (தலா 8) உள்ளன.

    Next Story
    ×