search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இறுதிப் போட்டியில் கடுமையாக போராட வேண்டியிருக்கும்: பி.வி. சிந்து சொல்கிறார்
    X

    இறுதிப் போட்டியில் கடுமையாக போராட வேண்டியிருக்கும்: பி.வி. சிந்து சொல்கிறார்

    அகேனா யமகுச்சிக்கு எதிரான இறுதிப் போட்டி கடுமையான இருக்கும் என இந்திய முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து கூறியுள்ளார்.
    உலகத் தரவரிசையில் முதல் 8 இடத்திற்குள் இருக்கும் தலைசிறந்த பேட்மிண்டன் வீரர்கள் மற்றும் வீராங்கனைளுக்கு இடையிலான உலக சூப்பர்சீரிஸ் இறுதி பேட்மிண்டன் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து கலந்து கொண்டு அசத்தி வருகிறார்.

    மூன்று லீக் போட்டிகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறிய பி.வி. சிந்து அரையிறுதியில், சீன வீராங்கனை சென் யுஃபெய்-ஐ வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார். இறுதிப் போட்டியில் மற்றொரு சீன வீராங்கனை அகேனா யமகுச்சியை எதிர்கொள்கிறார்.



    லீக் சுற்றில் அகேனா யமகுச்சியை 36 நிமிடத்தில் 21-9, 21-13 என பி.வி. சிந்து எளிதில் வீழ்த்தினார். ஆனால், இறுதிப் போட்டி எளிதாக இருக்காது என பி.வி. சிந்து கூறியுள்ளார்.

    இறுதிப் போட்டி குறித்து பி.வி. சிந்து கூறுகையில் ‘‘இறுதிப் போட்டி எளிதாக இருக்கும் என நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கவில்லை. ஆனால், நீண்ட நேர போட்டிக்காக நான் தயாராக இருக்கிறேன். 100 சதவீதம் உறுதி என்னிடம் உள்ளது. 11-2, 11-3 என லீக் போட்டியில் முன்னிலைப் பெற்றது போல் முன்னிலைப் பெறுவது எளிதான காரியம் அல்ல. நீண்ட போட்டியாக இருக்கும். ஒவ்வொரு புள்ளிக்கும் கடுமையாக போராட வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×