search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏராளமான குழந்தைகள் பெற்றெடுக்க விராட் - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு டி வில்லியர்ஸ வாழ்த்து
    X

    ஏராளமான குழந்தைகள் பெற்றெடுக்க விராட் - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு டி வில்லியர்ஸ வாழ்த்து

    சந்தோசமாக இணைந்து வாழ்ந்து ஏராளமான குழந்தைகள் பெற்றெடுக்க விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு டி வி்ல்லியர்ஸ் திருமண வாழ்த்து தெரிவித்துள்ளார்.
    தென்ஆப்பிரிக்கா அணியின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபி டி வில்லியர்ஸ். இவர் ஐ.பி.எல். தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக நீண்ட காலமாக விளையாடி வருகிறார். அந்த அணியின் கேப்டனாக இருக்கும் விராட் கோலியும், அவரும் நெருங்கிய நண்பர்கள். கிரிக்கெட் ஆடுகளத்தில் ஆக்ரோஷமாக மோதிக்கொண்டாலும், மைதானத்திற்கு வெளியே சகஜமாக பழகக்கூடியவர்கள்.

    இந்திய அணியின் கேப்டனாக விளங்கும் விராட் கோலிக்கும், பாலிவுட் நடிகையுமான அனுஷ்கா சர்மாவிற்கும் கடந்த 11-ந்தேதி இத்தாலியில் உள்ள டஸ்கனின் பாரம்பரிய ரிசார்ட்டில் வைத்து திருமணம் நடைபெற்றது. இந்த நட்டசத்திர ஜோடிக்கு பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றன.



    இந்நிலையில் விராட் கோலிக்கு டி வில்லியர்ஸ் வீடியோ மூலம் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். அதில் விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடி சந்தோசமாக வாழ்ந்து, ஏராளமான குழந்தைகள் பெற்றெடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.



    டி வில்லியர்ஸ் தனது வீடியோ வாழ்த்துச் செய்தியில் ‘‘திருமணம் செய்து கொண்டதற்காக விராட் கோலி - அனுஷ்கா சர்மா ஜோடிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் இணைந்து சந்தோசமான வாழ்க்கையை வாழப்போகிறார்கள் என்பது எனக்குத் தெரியும். அதன்மூலம் ஏராளமான குழந்தைகள் பெற்றெடுப்பார்கள் என நம்புகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.
    Next Story
    ×