search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இரட்டை சதம் அடித்து அசத்தல்: ரோகித் சர்மாவின் அபார ஆட்டம் தொடரும் - கங்குலி
    X

    இரட்டை சதம் அடித்து அசத்தல்: ரோகித் சர்மாவின் அபார ஆட்டம் தொடரும் - கங்குலி

    இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்ததை தொடர்ந்து அவர் தொடர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார்.
    கொல்கத்தா:

    இலங்கைக்கு எதிராக மொகாலியில் நடந்த 2-வது ஒரு நாள் போட்டியில் இந்தியாவின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மா இரட்டை சதம் (208 ரன்) அடித்து அசத்தினார்.

    இது அவருக்கு ஒரு நாள் போட்டியில் 3-வது இரட்டை சதமாகும். ஏற்கனவே அவர் இலங்கை, ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இரட்டை சதம் அடித்து இருந்தார்.

    இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மாவை முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    ரோகித்சர்மாவின் இரட்டை சதம் அற்புதமானது. அவர் வெறும் 36 பந்தில் 100 ரன்னில் இருந்து இரட்டை சதத்தை அடித்து விட்டார்.

    இலங்கை பந்து வீச்சாளர்களை என்னி வருத்தப்பட்டேன். முன்பு வீரேந்திர ஷேவாக், தெண்டுல்கர் அதிரடியாக விளையாடினர். தற்போது வீராட்கோலி, ரோகித் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்கள்.

    ரோகித் சர்மா அபாரமான வீரர். இந்த ஆண்டில் ஒரு நாள் போட்டியில் அவரது சாதனைகள் சிறப்பு வாய்ந்தது. அவர் தொடர்ந்து அபாரமாக ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கிறேன்.

    பகல்-இரவு டெஸ்ட் போட்டி தவிர்க்க முடியாத ஒன்று. சிவப்பு பந்துக்கு பதில் பிங்க் கலர் பந்து பயன்படுத்தப்படுகிறது அவ்வளவு தான்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.ஐ.) வருங்கால சுற்றுப் பயணம் மற்றும் போட்டி அட்டவணை குறித்து முடிவு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பங்கேற்கும் குழுவில் கங்குலி, கிரிக்கெட் வாரிய நிர்வாகி ராகுல் ஜோஷி ஆகியோர் இடம் பெறலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×