search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா: இந்த ஆண்டில் 45 சிக்சர்
    X

    தெண்டுல்கரை முந்தினார் ரோகித்சர்மா: இந்த ஆண்டில் 45 சிக்சர்

    இலங்கைக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 12 சிக்சர் அடித்ததன் மூலம் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில் தெண்டுல்கரை முந்தி ரோகித்சர்மா சாதனையை படைத்தார்.
    ரோகித்சர்மா நேற்று 12 சிக்சர் அடித்தார். இதன்மூலம் இந்த ஆண்டில் அவர் 45 சிக்சர்களை (20 ஆட்டம்) தொட்டார். இதனால் ஒரு ஆண்டில் அதிக சிக்சர் அடித்த இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அவர் தெண்டுல்கரை முந்தினார். தெண்டுல்கர் 1998-ம் ஆண்டில் 40 சிக்சர்கள் (33 போட்டி) அடித்தார்.

    ஒரு ஆண்டில் அதிக சிக்சர் எடுத்த சர்வதேச வீரர்களில் ரோகித்சர்மா 3-வது இடத்தை பிடித்தார். டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) 2015-ம் ஆண்டில் 58 சிக்சர்களும் (18 போட்டி), அப்ரிடி (பாகிஸ்தான்) 2002-ம் ஆண்டில் 48 சிக்சர்களும் (36 போட்டி) விளாசி இருந்தனர்.



    இலங்கைக்கு எதிராக இன்னும் ஒரே ஒரு ஒருநாள் போட்டி இருப்பதால் அப்ரிடியை ரோகித்சர்மா முந்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    Next Story
    ×