search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3-வது இரட்டை சதம்: ரோஹித் ஷர்மாவுக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்துகள்
    X

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 3-வது இரட்டை சதம்: ரோஹித் ஷர்மாவுக்கு டுவிட்டரில் குவியும் வாழ்த்துகள்

    சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மூன்றாவது இரட்டை சதம் அடித்து உலகசாதனை படைத்த ரோஹித் ஷர்மாவுக்கு டுவிட்டரில் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    மொகாலி:

    இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

    இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் இலங்கை அணி கேப்டன் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்ந்தெடுத்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 392 ரன்கள் குவித்தது. இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் அடித்தார். அவர் 100 ரன்களில் இருந்து 200 ரன்கள் எடுக்க 36 பந்துகளே எடுத்துக்கொண்டார். ரோகித் சர்மா இன்றைய போட்டியில் 153 பந்தில் 12 சிக்ஸர்கள், 13பவுண்டரிகள் விளாசி 208 ரன்களை குவித்தார். 


    ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்த மகிழ்ச்சியில் அவரது மனைவி


    இது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அடிக்கும் மூன்றாவது இரட்டை சதமாகும். ரோஹித் ஷர்மா, முன்னதாக கடந்த 2013-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 208 ரன்களும், 2014-ம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 264 ரன்களும் எடுத்துள்ளார். 

    ரோஹித் ஷர்மா தவிர இந்தியாவின் சேவாக், சச்சின் டெண்டுல்கர், நியூசிலாந்தின் மார்டின் குப்தில் மற்றும் மேற்கிந்திய தீவுகளின் கிறிஸ் கெயில் ஆகியோரும் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் அடித்துள்ளனர். கேப்டனாக அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் ரோஹித் இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார். முதல் இடத்தில் சேவாக் உள்ளார்.

    ஒரே ஆண்டில் இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோஹித் ஷர்மா மூன்றாவது இடத்திற்கு முன்னேறினார். அவர் இந்தாண்டில் இதுவரை 6 சதங்கள் அடித்துள்ளார். சச்சின் டெண்டுல்கர் 9 சதங்களுடன் முதல் இடத்திலும், சவுரவ் கங்குலி 7 சதங்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். மூன்ராவது இடத்தில் 6 சதங்களுடன் ரோஹித் ஷர்மா, விராட் கோலி, ராகுல் டிராவிட், சச்சின் டெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர்.

    இந்திய அணி கேப்டனாக குறைந்த போட்டிகள் முதல் சதம் அடித்தவர்கள் பட்டியலிலும் ரோஹித் சர்மா முதல் இடத்திற்கு முன்னேறினார். அவர் கேப்டனாக களமிறங்கிய 2-வது போட்டியில் சதம் அடித்துள்ளார். முதல் இடத்தில் சச்சின் டெண்டுல்கர் உள்ளார். அவர் கேப்டனாக விளையாடிய முதல் போட்டியிலேயே சதம் அடித்தார்.

    மூன்றாவது இரட்டை சதம் அடித்து சாதனை படைத்த ரோஹித் ஷர்மாவுக்கு டுவிட்டரில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. பிரபல கிரிக்கெட் வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.


    Next Story
    ×