search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பந்து வீசுவோம்: உமேஷ் யாதவ் நம்பிக்கை
    X

    தென்னாப்பிரிக்காவில் சிறப்பாக பந்து வீசுவோம்: உமேஷ் யாதவ் நம்பிக்கை

    தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக எங்களால் சிறப்பாக பந்துவீசி 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும் என்று உமேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. வருகிற 17-ந்தேதியுடன் ஒருநாள் தொடர் முடிகிறது. அதை தொடர்ந்து இலங்கையுடன் மூன்று 20 ஓவர் போட்டிகளில் ஆடுகிறது. 24-ந்தேதியுடன் இலங்கை தொடர் முடிகிறது.

    அதன்பிறகு இந்திய அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 6 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 5-ந்தேதி கேப்டவுனில் தொடங்குகிறது.

    தென்னாப்பிரிக்கா டெஸ்ட் தொடர் குறித்து இந்திய அணியின் வேகப்பந்து வீரர் உமேஷ் யாதவ் கூறியதாவது:-



    தென்னாப்பிரிக்க ஆடுகளங்கள் (பிட்ச்) வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற வகையில் இருக்கும். இதனால் எங்கள் மீது அதிகமான எதிர்பார்ப்பு இருக்கும். இந்திய வேகப்பந்து வீச்சை பொறுத்தவரை தென்னாப்பிரிக்காவில் 20 விக்கெட்டுகளை கைப்பற்ற முடியும்.

    அதற்கான திறமை எங்களிடம் இருக்கிறது. கடந்த 14 மாதங்களாக இந்திய அணி சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை பெற்று இருக்கிறது. தற்போது வெளிநாட்டில் வெற்றி பெற வேண்டிய நேரம் இதுவாகும்.

    உடல் தகுதி முறையான திட்டம் ஆகியவை எங்களது வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது. இதேநிலையை தென்னாப்பிரிக்காவிலும் கடை பிடிப்போம். யாரும் எங்களை தடுத்து நிறுத்த முடியாது.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    உமேஷ் யாதவ் கடந்த 14 மாதங்களில் 17 டெஸ்டில் விளையாடி 40 விக்கெட் கைப்பற்றி உள்ளார். அவர் இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீரர்களில் ஒருவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×