search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2019 முதல் 2023 வரை 306 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய கிரிக்கெட் அணி
    X

    2019 முதல் 2023 வரை 306 போட்டிகளில் விளையாடுகிறது இந்திய கிரிக்கெட் அணி

    இந்திய சீனியர் கிரிக்கெட் அணி 2019 முதல் 2023 வரை 306 போட்டிகளில் இந்திய அணி விளையாடுகிறது. இதில் 81 போட்டி இந்தியாவில் நடக்கிறது.
    இந்திய சீனியர் அணி 2019 முதல் 2023 வரை விளையாடும் போட்டிகள் குறித்த எதிர்கால சுற்றுப் பயணம் திட்டம் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்தியா 2019 முதல் 2023 வரை அடுத்த நான்கு வருடத்தில் இந்தியா 306 போட்டிகளில் விளையாடுகிறது. இது முந்தைய காலத்தை விட 84 போட்டிகள் குறைவாகும். அதேவேளையில் இந்திய மண்ணில் 81 போட்டிகளை நடத்துகிறது. இது கடந்த அட்டவணையை விட 30 போட்டிகள் அதிகமாகும்.



    மேலும், இந்தியா முதன்முறையாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கிறது. ஆப்கானிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் போட்டியும் இந்தியாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    முக்கியமாக ராஜஸ்தான் மாநில கிரிக்கெட் வாரியத்திற்கு விதித்திருந்த தடையை நீக்கியுள்ளது. லலித் மோடியுடன எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற நிபந்தனையுடன் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×