search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    2-வது இன்னிங்சில் சதம் அடித்த ராஸ் டெய்லர்
    X
    2-வது இன்னிங்சில் சதம் அடித்த ராஸ் டெய்லர்

    ஹாமில்டன் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 444 ரன்கள் இலக்கு

    ஹாமில்டனில் நடைபெற்று வரும் 2-வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.
    நியூசிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து ராவல் (84), கிராண்ட்ஹோம் (58) ஆகியோர் அரைசதத்தால் 373 ரன்கள் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கேப்ரியல் 4 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சை தொடங்கியது. கேப்டன் பிராத்வைட்டை (66) தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததால் வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 221 ரன்னில் சுருண்டது.


    முதல் இன்னிங்சில் அரைசதம் அடித்த பிராத்வைட்

    152 ரன்கள் முன்னிலையுடன் நியூசிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர் ராவல் 4 ரன்னிலும், லாதம் 22 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அதன்பிறகு வந்த கேப்டன் கேன் வில்லியம்சன் 54 ரன்கள் சேர்த்தார். அனுபவ வீரர் ராஸ் டெய்லர் அவுட்டாகாமல் 107 ரன்கள் விளாச, நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் குவித்தது.

    இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து நியூசிலாந்து அணி 443 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றிக்கு 444 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து.



    இன்னும் இரண்டு நாட்கள் ஆட்டம் மீதமுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு நாட்கள் தாக்குப்பிடித்து விளையாடினால் வெற்றி பெற வாய்ப்புண்டு. ஆனால், நியூசிலாந்தின் வேகப்பந்து வீச்சை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் தாக்குபிடிப்பார்களா? என்பது சந்தேகம்.
    Next Story
    ×