search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்தீவ் பட்டேலுக்கு காயம்: தென்ஆப்பிரிக்கா தொடருக்கு சிக்கல்?
    X

    பார்தீவ் பட்டேலுக்கு காயம்: தென்ஆப்பிரிக்கா தொடருக்கு சிக்கல்?

    ரஞ்சி டிராபி காலிறுதியில் பார்தீவ் பட்டேலுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் கலந்து கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
    ரஞ்சி டிராபி காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் காலிறுதி ஒன்றில் குஜராத் - பெங்கால் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டி கடந்த 10-ந்தேதி தொடங்கியது.

    முதல்நாளில் பெங்கால் பேட்டிங் செய்து கொண்டிருக்கும்போது குஜராத் அணி கேப்டனும், விக்கெட் கீப்பரும் ஆன பார்தீவ் பட்டேல் விக்கெட் கீப்பர் பணியை செய்துகொண்டிருந்தார். அப்போது அவரது கையில் உள்ள நடுவிரலில் காயம் ஏற்பட்டது. காயம் பலமாக இருந்ததால் முதல் உணவு இடைவேளையில் இருந்து தற்போது வரை அவர் மீண்டும் களத்திற்கு திரும்பவில்லை.

    அடுத்த மாதம் தொடக்கத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்கா செல்கிறது. சகா முதன்மை விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். மாற்று விக்கெட் கீப்பராக பார்தீவ் பட்டேல் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தற்போது ஏற்பட்டுள்ள காயத்தால் பார்தீவ் பட்டேல் தென்ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பதற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.



    அவரது காயம் குறித்து குஜராத் பேட்ஸ்மேன் மன்ப்ரீத் ஜூனேஜா கூறுகையில் ‘‘அவரது கை விரலில் இரண்டு மூன்று முறை ஒரே இடத்தில் பந்து தாக்கியது. அது மிகவும் மோசமான தாக்குதல். அவரது காயம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து உறுதியான தகவல் தெரியவில்லை’’ என்றார்.

    ஆனால் பயிற்சியாளர் விஜய் பட்டேல், ‘‘பார்தீவ் பட்டேலுக்கு லேசான காயம்தான். அவர் தென்ஆப்பிரிக்கா தொடரில் பங்குபெறுவார்’’ என்றார்.
    Next Story
    ×