search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: வில்லாரியலை 2-0 என வீழ்த்தி பார்சிலோனா தொடர்ந்து முன்னிலை
    X

    லா லிகா: வில்லாரியலை 2-0 என வீழ்த்தி பார்சிலோனா தொடர்ந்து முன்னிலை

    லா லிகா கால்பந்து தொடரில் வில்லாரியலை 2-0 என வீழ்த்தி பார்சிலோனா புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
    ஸ்பெயின் நாட்டின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையில் நடைபெறும் மிகப்பெரிய தொடர் ‘லா லிகா’. இந்த தொடரில் முன்னணி அணிகளான பார்சிலோனா - வில்லாரியல் அணிகள் நேற்று நள்ளிரவு பலப்பரீட்சை நடத்தின.

    சொந்த மைதானத்தில் விளையாடிய வில்லாரியல் பார்சிலோனா அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்தது. மெஸ்சியின் பல வாய்ப்புகளை வில்லாரியல் அணி முறியடித்தது. இதனால் முதல் பாதி நேரத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.

    2-வது பாதி நேரத்தில் ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் வில்லாரியல் வீரர் ரபாசுடா அன்டோய்ன் ‘ரெட் கார்டு’ மூலம் வெளியேற்றப்பட்டார். இதனால் வில்லாரியல் 10 வீரர்களுடன் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி சுவாரஸ் 72-வது நிமிடத்திலும், மெஸ்சி 83-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.


    பார்சிலோனா வீரரிடம் இருந்து பந்தை பறிக்க முயற்சிக்கும் வில்லாரியல் வீரர்கள்

    அதன்பின் இரு அணி வீரர்களும் கோல் அடிக்காததால் பார்சிலோனா 2-0 என வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. பார்சிலோனா 15 போட்டிகளில் 12 வெற்றி, 3 டிரா மூலம் 39 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது.


    வெற்றி மகிழ்ச்சியில் சுவாரஸ்

    வாலென்சியா 15 போட்டிகளில் 10 வெற்றி, 4 டிரா, ஒரு தோல்வியின் மூலம் 34 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. ரியல் மாட்ரிட் 31 புள்ளிகளுடன் 4-வது இடத்திற்கு பின்தங்கியுள்ளது.

    இந்த வாரம் நடைபெற்ற மற்ற லீக் ஆட்டங்களில் அலெவ்ஸ், ரியல் மாட்ரிட், டெபொர்டிவோ, வாலென்சியா, மலாகா, அட்லெடிகோ, அத்லெடிக் அணிகள் வெற்றி பெற்றன.
    Next Story
    ×