search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காளதேச டெஸ்ட் அணி கேப்டனாக சாஹிப் அல் ஹசன் நியமனம்
    X

    வங்காளதேச டெஸ்ட் அணி கேப்டனாக சாஹிப் அல் ஹசன் நியமனம்

    வங்காளதேச டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். முஷ்பிகுர் ரஹிம் துணை கேப்டன்.
    வங்காளதேச டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டவர் முஷ்பிகுர் ரஹிம். இவரது தலைமையில் வங்காளதேச கிரிக்கெட் வரலாற்று வெற்றிகளை பதிவு செய்தது. இவரது தலைமையில் வங்காளதேச அணி இங்கிலாந்து, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை முதன்முறையாக வென்றிருந்தது.



    சமீபத்தில் வங்காளதேச அணி தென்ஆப்பிரிக்கா சென்றிருந்தது. இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் படுதோல்வியடைந்தது. மேலும் கேப்டன் முஷ்பிகுர் ரஹிம் சிறப்பான வகையில் பேட்டிங் செய்யவில்லை.



    இதனால், முஷ்பிகுர் ரஹிம பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் அவரை கேப்டன் பதவியில் இருந்து வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அதிரடியாக தூக்கியது. அவருக்குப் பதிலாக ஆல்ரவுண்டர் சாஹிப் அல் ஹசனை கேப்டனாக நியமித்துள்ளது. சாஹிப் அல் ஹசன் டி20 அணி கேப்டனாகவும் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×