search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: ரோகித் சர்மா
    X

    80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம்: ரோகித் சர்மா

    இலங்கையுடனான முதல் ஒருநாள் போட்டியில் 70 முதல் 80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும் என இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.
    இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:-

    112 ரன்கள் என்பது போதுமான ஸ்கோர் அல்ல. இன்னும் 70 முதல் 80 ரன்கள் கூடுதலாக எடுத்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி இருந்திருக்கும். எல்லா நாட்களிலும் பேட்டிங்குக்கு உகந்த ஆடுகளம் கிடைக்காது. எந்த மாதிரியான சூழ்நிலை இருந்தாலும் அதற்கு தகுந்தபடி நம்மை மாற்றிக்கொண்டு விளையாடுவதே முக்கியமாகும்.

    பாடம் கற்றுக்கொள்வதற்குரிய ஒரு ஆட்டமாக இது இருந்தது. டோனி, இந்திய அணிக்காக நீண்ட காலமாக சிறந்த பங்களிப்பை அளித்து வருகிறார். இப்படிப்பட்ட சூழலில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை அவர் அறிவார். அவர் இந்திய அணியின் தூண் ஆவார். அவருக்கு யாராவது ஒரு வீரர் நன்கு ஒத்துழைப்பு தந்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். கேப்டனாக முதல் ஆட்டத்திலேயே தோற்றதை நல்ல அனுபவமாக எடுத்துக்கொள்ள முடியாது.



    யாரும் தோல்வியை விரும்பமாட்டார்கள். தோல்வியை மறந்து விட்டு எஞ்சிய இரு ஆட்டங்களிலும் கவனம் செலுத்தி, சிறப்பாக ஆட வேண்டியது அவசியமாகும். ரஹானேவை, நாங்கள் ஒரு தொடக்க ஆட்டக்காரராகவே அடையாளம் கண்டுள்ளோம். அதனால் தான் அவரை இன்றைய (நேற்று) ஆட்டத்தில் சேர்க்கவில்லை.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார். 
    Next Story
    ×