என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக ஹாக்கி லீக் பைனல்: ஜெர்மனியை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றது இந்தியா
Byமாலை மலர்10 Dec 2017 2:24 PM GMT (Updated: 10 Dec 2017 2:24 PM GMT)
ஒடிசாவில் நடந்து வரும் உலக ஹாக்கி லீக் பைனலில் மூன்றாவது இடத்துக்கான போட்டியில் ஜெர்மனி அணியை வீழ்த்தி இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
புவனேஸ்வர்:
ஒடிசா மாநிலம் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா விளையாட்டு மைதானத்தில் உலக ஹாக்கி லீக் பைனல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. லீக் போட்டிகள் முடிந்து இறுதி போட்டி மற்றும் மூன்றாவது இடத்துக்கான போட்டி நடந்து வருகிறது.
இன்று மூன்றாவது இடத்துக்கான போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் ஜெர்மனி மற்றும் இந்திய அணிகள் மோதின. இந்தப் போட்டியில் வெல்லும் முனைப்புடன் இரு அணியினரும் விளையாடினர்.
இந்திய அணி தரப்பில் எஸ்.வி.சுனில ஆட்டத்தின் 20-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்து இந்தியாவுக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால், ஆட்டத்தின் 37-வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் மார்க் அப்பேல் ஒரு கோல் அடித்தார். இதனால் ஆட்டம் சமன் அடைந்தது.
இதைத்தொடர்ந்து, இரு அணியினரும் தீவிரமாக விளையாடினர். ஆட்டத்தின் 54-வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன் பிரீத் சிங் கோலாக மாற்றினார்.
இதையடுத்து, இந்தியா 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதன்பின், ஜெர்மனியால் கோல் எதுவும் அடிக்க முடியவில்லை.
இறுதியில், இந்தியா ஜெர்மனியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்று வெண்கலப் பதக்கம் பெற்றது.
Next Story
×