search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    உலக ஹாக்கி லீக் பைனல்ஸ்: ஸ்பெயின், பெல்ஜியம் அணிகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

    உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடரின் லீக் பிரிவு போட்டிகளில் ஸ்பெயின் மற்றும் பெல்ஜியம் அணியினர் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினர்.
    புவனேஸ்வர்:

    ஹாக்கியில் சர்வதேச தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள அணிகள் பங்கேற்கும் உலக ஹாக்கி லீக் பைனல்ஸ் தொடர் போட்டிகள் ஒடிசாவில் நடந்து வருகிறது. நேற்று ‘ஏ’ பிரிவில் கடைசி லீக் போட்டிகள் நடைபெற்றன. மாலை 5:30 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் அர்ஜெண்டினா - ஸ்பெயின் அணிகள் மோதின.

    இப்போட்டியின் 21-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் பரேடெஸ் மேட்டியாஸ் முதல் கோல் அடித்தார். இதனால் 1-0 என்ற கோல் கணக்கில் அர்ஜெண்டினா முன்னிலை பெற்றது. அதன்பின்னர் மூன்றாம் கால்பகுதி ஆட்டநேர முடிவு வரை இரு அணியினரும் வேறு எந்த கோலும் அடிக்கவில்லை.



    தொடர்ந்து நடைபெற்ற கடைசி கால்பகுதி ஆட்டநேரத்தின் 50-வது நிமிடத்தில் ஸ்பெயினின் கியூமடா பவு கோல் அடித்தார். அதைத்தொடர்ந்து ஆட்டம் முடிய ஒரு நிமிடமே இருந்த நிலையில் ஸ்பெயினின் ரோமியூ ஜோசப் கோல் அடித்தார். இதன் காரணமாக 2-1 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.

    இரவு 7:30 மணிக்கு தொடங்கிய மற்றொரு ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் பெல்ஜியம், நெதர்லாந்தை எதிர்கொண்டது. இப்போட்டியின் 19-வது மற்றும் 30-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் லைபேர்ட் லாயிக் தொடர்ந்து இரண்டு கோல்கள் அடித்தார். அதைத்தொடர்ந்து 32-வது நிமிடத்தில் பெல்ஜியம் அணியின் பூன் டாம் மேற்கொண்டு ஒரு கோல் அடித்தார். நெதர்லாந்து அணியினர் இறுதிவரை எந்த கோலும் அடிக்கவில்லை. இதனால் பெல்ஜியம் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றனர்.

    இன்று நடைபெறும் காலிறுதி போட்டிகளில் ஸ்பெயின் - ஆஸ்திரேலியா, பெல்ஜியம் - இந்தியா அணிகள் பலப்பரீட்சை செய்ய உள்ளன.
    Next Story
    ×