search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி: தமிழக அணி முதல் இன்னிங்சில் 226/5 - இந்திரஜித், அபரஜித் அரைசதம்
    X

    பரோடாவுக்கு எதிரான ரஞ்சி டிராபி போட்டி: தமிழக அணி முதல் இன்னிங்சில் 226/5 - இந்திரஜித், அபரஜித் அரைசதம்

    பரோடா அணியுடனான ரஞ்சி கோப்பை சி பிரிவு லீக் ஆட்டத்தின் முதல் இன்னிங்சில் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்துள்ளது.
    வதோதரா:

    ரஞ்சி டிராபி தொடரின் 7-வது சுற்று லீக் ஆட்டங்கள் 25-ம்தேதி தொடங்கியது. வதோதராவில் நடக்கும் சி பிரிவு லீக் போட்டியில் தமிழக அணி, பரோடா அணியுடன் மோதியது.

    இப்போட்டியில், டாசில் வென்ற பரோடா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட முடிவில் பரோடா 8 விக்கெட் இழப்புக்கு 254 ரன் எடுத்தது. ஸ்வப்னில் 94 ரன்களுடனும், வகேலா 6 ரன்னுடன் களத்தில் இருந்தனர். தமிழக பந்துவீச்சில் கே.விக்னேஷ், கவுஷிக் தலா 2 விக்கெட்களும், முகமது, வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

    நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. ஸ்வப்னில் சதம் அடித்தார். தொடர்ந்து நிதானமாக விளையாடிய அவர் 144 ரன்களில் யோ மகேஷ் பந்தில் ஆட்டமிழந்தார். பரோடா அணி முதல் இன்னிங்சில் 309 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து தமிழ்நாடு அணி விளையாடியது. தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜெகதீசனும், அபிநவ் முகுந்தும் களமிறங்கினர். ஜெகதீசன் 7 ரன்களிலும், முகுந்த் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.



    அதன்பின்னர் கவுஷிக் காந்தியுடன் பாபா இந்திரஜித் ஜோடி சேர்ந்தார். இருவரும் நிதானமாக விளையாடி ரன் குவித்தனர். கவுஷிக் காந்தி 35 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து பாபா இந்திரஜித் - பாபா அபரஜித் ஜோடி சேர்ந்தனர். இருவரும் சிறப்பாக விளையாடினர். அரைசதம் அடித்த இந்திரஜித் 58 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அபரஜித்தும் அரைசதம் அடித்தார்.
    அடுத்து களமிறங்கிய வாஷிங்டன் சுந்தர் 12 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார்.

    தொடர்ந்து பாபா அபரஜித்துடன் ஜெகதீசன் கவுசிக் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் தமிழக அணி 5 விக்கெட் இழப்பிற்கு 226 ரன்கள் எடுத்தது. அபரஜித் 59 ரன்களுடனும், ஜெகதீசன் 37 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். பரோடா அணியின் கார்த்திக் காகடே 2 விக்கெட்களும், அதித் ஷெத், லுக்மன் மெரிவாலா, துருவ் பட்டெல் ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    தமிழக அணி 83 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது.
    Next Story
    ×