search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை: இறுதிபோட்டிக்கு அன்குஷிதா, ஷாஷி சோப்ரா, ஜோதி குலியா முன்னேற்றம்
    X

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை: இறுதிபோட்டிக்கு அன்குஷிதா, ஷாஷி சோப்ரா, ஜோதி குலியா முன்னேற்றம்

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டிக்கு அன்குஷிதா போரோ, ஷாஷி சோப்ரா மற்றும் ஜோதி குலியா ஆகியோர் முன்னேறினர்.
    கவுஹாத்தி:

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியின் அரையிறுதி சுற்று போட்டிகளுக்கு ஏழு இந்திய வீராங்கனைகள் முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தனர். நேற்று அரையிறுதி சுற்று போட்டிகள் நடைபெற்றன.

    64 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில், சர்வதேச இளைஞர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் அன்குஷிதா போரோ, தாய்லாந்தின் சக்ஸ்ரீ தஞ்சனோக்கை வீழ்த்தி இறுதிபோட்டிக்கு முன்னேறினார்.



    இதேபோல் 57 கிலோ எடைப்பிரிவில் ஷாஷி சோப்ரா, மங்கோலியாவின் மோன்கோர் நமூனை 5-0 என வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 51 கிலோ எடைப்பிரிவின் அரையிறுதி போட்டியில் ஜோதி குலியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.



    81 கிலோவிற்கு அதிகமானோர் பிரிவின் அரையிறுதி போட்டியில் நேகா யாதவ் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்துடன் வெளியேறினார்.

    இன்று நடைபெறும் அரையிறுதி போட்டிகளில் 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து, 54 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி, 81 கிலோ எடைப்பிரிவில் அனுபமா ஆகியோர் விளையாட உள்ளனர்.
    Next Story
    ×