search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா - ஜேம்ஷெத்பூர் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா - ஜேம்ஷெத்பூர் இடையேயான போட்டி டிராவில் முடிந்தது

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியில் கொச்சியில் இன்று நடைபெற்ற கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி., ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணிகளுக்கு இடையேயான லீக் போட்டி டிராவில் முடிந்தது.

    கொச்சி:

    4-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. 10 அணிகள் இடையிலான இந்த போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் உள்ளூர், வெளியூர் அடிப்படையில் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

    இந்த போட்டி தொடரில் கொச்சியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெற்ற 7-வது லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. - ஜேம்ஷெத்பூர் எப்.சி. அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது 2-வது லீக் ஆட்டமாகும். இரு அணிகளும் முதலில் விளையாடிய லீக் 
    போட்டிகளும் டிராவில் முடிந்தது. 



    போட்டி தொடங்கியது முதல் இரு அணியினரும் மாறி மாறி கோல் போட முயற்சித்தனர். இருப்பினும் முதல் பாதி நேர ஆட்டத்தில் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை.

    தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது பாதிநேர ஆட்டத்திலும் இரு அணியினரும் எந்த கோலும் அடிக்கவில்லை. இதையடுத்து இந்த போட்டி டிராவில் முடிந்தது. கேரளா பிளாஸ்டர்ஸ் அணியின் மெஹ்தாப் ஹொசைன் ஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.



    இதனால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இரு அணிகளும் தலா 2 புள்ளிகளுடன் 5 மற்றும் 6-வது இடத்தில் உள்ளன.

    நாளை மும்பையில் நடைபெறும் லீக் போட்டியில் மும்பை சிட்டி எப்.சி. - எப்.சி. கோவா அணிகள் மோத உள்ளன.
    Next Story
    ×