search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி
    X

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன்: பிவி சிந்து அரையிறுதிக்கு தகுதி

    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் காலிறுதியில் இந்திய வீராங்கனை பிவி சிந்து ஜப்பானின் அகேன் யமகுச்சியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
    ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனையான பிவி சிந்து ஜப்பானின் அகேன் யமகுச்சியை எதிர்கொண்டார். இதில் 21-12, 21-19 என நேர்செட் கணக்கில் பிவி சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொள்கிறார்.



    உலகத்தர வரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் பிவி சிந்து யமகுச்சியுடன் 6 முறை மோதியுள்ளார். இதில் நான்கு முறை பிவி சிந்து வெற்றி வாகை சூடியுள்ளார். இந்த வெற்றியை பெற சிந்துவிற்கு 37 நிமிடங்கள் தேவைப்பட்டது.
    Next Story
    ×