search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஹர்திக் பாண்டியாவின் பேக்-அப் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்: விராட் கோலி
    X

    ஹர்திக் பாண்டியாவின் பேக்-அப் ஆல்ரவுண்டர் விஜய் சங்கர்: விராட் கோலி

    இந்திய அணியின் ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா செயல்பட்டு வருகிறார். அவருக்கு பேக்-அப் ஆல்ரவுண்டராக விஜய் சங்கர் செயல்படுவார் என விராட் கோலி தெரிவித்துள்ளார்.
    இந்திய அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக திகழ்ந்தவர் கபில்தேவ். 1983-ம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக்கோப்பை தொடரில் இவரது தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. டெஸ்ட் போட்டியில் 434 விக்கெட்டுக்கள் வீழ்த்தி அசத்தியுள்ளார். கிரிக்கெட் வரலாற்றில் தலைசிறந்த ஆல்ரவுண்டரில் ஒருவராக கபில்தேவ் கருதப்பட்டு வருகிறார்.

    அவருக்குப்பின் இந்திய அணியில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் இல்லாமல் இருந்தது. இந்நிலையில்தான் ஹர்திக் பாண்டியா பிசிசிஐ கண்ணுக்கு தென்பட்டார். தற்போது இந்திய அணியில் முதன்மை ஆல்ரவுண்டராக திகழ்ந்து வருகிறார்.



    கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் தொடர்ந்து இடம்பிடித்த ஹர்திக் பாண்டியா, இலங்கை தொடரின்போது ஓய்வு கேட்டார். இதனால் இலங்கை தொடரில் அவர் இடம்பெறவில்லை. இலங்கை தொடர் முடிந்தவுடன் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ஜனவரி ஐந்தாம் தேதியில் இருந்து தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக இந்தியா விளையாட இருக்கிறது.

    இந்த தொடருக்கு ஹர்திக் பாண்டியா முக்கிய பணியாற்றுவார் என்று கருதப்படுகிறது. ஒருவேளை ஹர்திக் பாண்டியாவிற்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அணிக்கு பாதகம் ஏற்பட்டு விடக்கூடாது என பிசிசிஐ நினைக்கிறது.

    இந்நிலையில்தான் இலங்கை தொடரின் கடைசி இரண்டு டெஸ்டிற்கான இந்திய அணியில் இருந்து புவனேஸ்வர் குமார் விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக தமிழகத்தின் வேகப்பந்து வீச்சாளரான விஜய் சங்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    விஜய் சங்கர் ஹர்திக் பாண்டியாவிற்கு பேக்-அப் ஆல்ரவுண்டர் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். விஜய் சங்கர் குறித்து விராட் கோலி கூறுகையில் ‘‘விஜய் சிங்கர் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியில் இடம்பிடித்துள்ளார். இது சிறப்பானது. அணி முன்னேறிச் செல்வதற்காக நாங்கள் இன்னொரு ஆல்ரவுண்டரை தயார் செய்ய விரும்பினோம்.



    எங்களின் திட்டத்தில் முதல் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாதான். நாம் மேலும் வளர்ச்சி அடைய வேகப்பந்து வீச்சு திறமையுடைய வீரர்களை கண்டுபிடிப்பது தேவையானது. வெளிநாட்டு தொடர்களுக்கு செல்லும்போது இதுபோன்ற ஆல்ரவுண்டர்கள் பேக்-அப் வீரர்களாக இருப்பது அவசியம். விஜய் சங்கரை களமிறக்கி, அவர் களத்தில் இறங்கி அணிக்காக என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணம்தான் என் மனது முழுவதும் உள்ளது.

    விஜய் சங்கர் சிறந்த பேலன்ஸ் கிரிக்கெட்டர். சிறப்பாக பேட்டிங் செய்வார், சிறந்த பீல்டர் மற்றும் சிறப்பாக பந்து வீசுகிறார். அவரால் தினசரி 10 முதல் 12 ஓவர்கள் வீச முடியும். நான் இன்று வலைப்பயிற்சியில் பார்த்தபோது சிறப்பாக பேட்டிங் செய்தார். இது அவருக்கு முன்னேற்றமாக இருக்கும். நான் சொன்ன மாதிரி சிறப்பாகவே செயல்பட்டார்’’ என்றார்.
    Next Story
    ×