search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நாக்பூர் விதர்பா மைதான கண்ணோட்டம்
    X

    நாக்பூர் விதர்பா மைதான கண்ணோட்டம்

    இந்தியா- இலங்கை மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூர் விதர்பா மைதானம் பற்றிய விவரங்களை பார்ப்போம்.
    2-வது டெஸ்ட் போட்டி நடைபெறும் நாக்பூர் விதர்பா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 45 ஆயிரம் பேர் அமரலாம். இங்கு 2008-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் டெஸ்ட் போட்டி நடந்தது.

    இதுவரை 5 டெஸ்ட் போட்டி நடந்து இருக்கிறது. இதில் 3 ஆட்டத்தில் (ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென்ஆப்பிரிக்கா) இந்தியா வென்றது. ஒரு ஆட்டம் (இங்கிலாந்து) டிரா ஆனது. 2010-ம் ஆண்டு இந்தியாவுக்கு எதிராக தென்ஆப்பிரிக்கா வெற்றி பெற்று இருந்தது.

    இந்தியா 8 விக்கெட்டுக்கு 566 ரன் குவித்ததே (நியூசிலாந்துக்கு எதிராக 2010) அதிகபட்ச ஸ்கோர் ஆகும். தென்ஆப்பிரிக்காவின் ஹசிம் அம்லா 253 ரன் எடுத்ததே தனிப்பட்ட வீரரின் அதிகபட்சமாகும்.

    இந்திய வீரர் ஷேவாக் 4 டெஸ்டில் 357 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் 15 விக்கெட் கைப்பற்றி உள்ளார்.

    நாக்பூர் மைதானத்தில் கடைசியாக 2015-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த டெஸ்டில் இந்தியா 124 ரன் வித்தியாசத்தில் வென்று இருந்தது.
    Next Story
    ×