search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 5 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்
    X

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: 5 இந்திய வீராங்கனைகள் காலிறுதிக்கு முன்னேற்றம்

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியின் காலிறுதி சுற்று போட்டிக்கு ஐந்து இந்திய வீராங்கனைகள் முன்னேறினர்.
    கவுஹாத்தி:

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டியின் காலிறுதி சுற்று போட்டிக்கு ஐந்து இந்திய வீராங்கனைகள் முன்னேறினர்.

    மகளிருக்கான உலக இளைஞர் குத்துச்சண்டை போட்டிகள் அசாம் மாநிலம் கவுஹாத்தியில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டிகளில் 38 நாடுகளைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.

    இதன் 64 கிலோ எடைப்பிரிவில், சர்வதேச இளைஞர் சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்தியாவின் அன்குஷிதா போரோ, துருக்கியின் காக்லோவை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

    இதேபோல் 54 கிலோ எடைப்பிரிவில் ஷாஷி சோப்ரா, 54 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி சவுத்ரி, 51 கிலோ எடைப்பிரிவில் ஜோதி குலியா மற்றும் 48 கிலோ எடைப்பிரிவில் நீத்து ஆகியோரும் காலிறுதிக்கு முன்னேறினர்.

    ஏற்கனவே 81 கிலோ எடைப்பிரிவில் அனுபமா மற்றும் 81+ கிலோ எடைப்பிரிவில் நேகா யாதவ் ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறி பதக்கங்களை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×