search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்ட்: பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டு
    X

    கொல்கத்தா டெஸ்ட்: பந்து வீச்சாளர்களுக்கு விராட் கோலி பாராட்டு

    இலங்கைக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்ததையடுத்து, பந்து வீச்சாளர்களுக்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி பாராட்டு தெரிவித்துள்ளார்.
    கொல்கத்தா டெஸ்ட் போட்டி முடிந்ததும் இந்திய அணி கேப்டன் விராட் கோலி அளித்த பேட்டியில், ‘இந்த ஆட்டத்தில் இருந்து ஏதாவது எடுக்க வேண்டியது முக்கியம் என்று நினைத்தோம். ஆனால் ஆடுகளத்தின் தன்மை 4-வது மற்றும் 5-வது நாளில் அதிக அளவில் மாற்றம் கண்டது.

    இலங்கை அணி பந்து வீச்சு நன்றாக இருந்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் அதிக முன்னிலை பெறாவிட்டால் எங்களால் ஆட்டத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று நம்பினோம். 2-வது இன்னிங்சில் இலங்கை அணியின் பேட்டிங் இந்த அளவுக்கு சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.

    எங்களது பந்து வீச்சு சிறப்பாக இருந்தது. புவனேஷ்வர் குமார் நல்ல வேகத்தில் பந்து வீசினார். கடுமையாக உழைக்கும் அவர் அதற்கு தகுந்த பலனை பெற்று வருகிறார். எங்களது அணியின் திட்டத்தில் புவனேஷ்வர் குமார் முக்கியமானவர்.

    சர்வதேச போட்டியில் 50 சதங்களை கண்டு இருப்பது நல்ல விஷயமாகும். சதத்தை விட அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்’ என்று தெரிவித்தார்.

    இலங்கை அணியின் கேப்டன் சன்டிமால் கருத்து தெரிவிக்கையில், ‘இதுபோன்ற சூழலில் டாஸ் முக்கியமானது. இந்த போட்டியில் நாங்கள் கடைசி வரை அணியாக நன்றாக போராடினோம். கடைசி 10-15 ஓவர்களில் அதிக நெருக்கடிக்கு ஆளானோம்’ என்றார்.
    Next Story
    ×