search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சி அளித்த உசைன் போல்ட்
    X

    ஆஷஸ் தொடர்: ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சி அளித்த உசைன் போல்ட்

    ஆஷஸ் தொடரில் விக்கெட்டுகளுக்கு இடையே வேகமாக ஓடி ரன்கள் குவிப்பதற்காக ஆஸ்திரேலிய வீரர்களுக்கு உசைன் போல்ட் பயிற்சி அளித்தார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வரும் வியாழக்கிழமை (நவம்பர் 23-ந்தேதி) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த இந்த தொடரை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என ஆஸ்திரேலியா திட்டமிட்டுள்ளது.

    இதற்கு காரணம் கடந்த முறை ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரை ஆஸ்திரேலியா 5-0 எனக்கைப்பற்றி இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்தது. மிட்செல் ஜான்சன் தனது வேகப்பந்து வீச்சால் இங்கிலாந்தை துவம்சம் செய்துவிட்டார். அதேபோல் தற்போதும் இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்யலாம் என ஆஸ்திரேலியா விரும்புகிறது.



    ஆனால், தற்போதைய இங்கிலாந்து அணி பலம் வாய்ந்ததாக இருக்கிறது. அதேநிலையில் ஆஸ்திரேலியா பேட்டிங் பலம் வாய்ந்ததாக இருக்கிறதா? என்பது சந்தேகம்.

    இதனால் ஒவ்வொரு துறையிலும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று ஆஸ்திரேலியா விரும்புகிறது. ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டுக்களுக்கு இடையில் விரைவாக ஓடி ரன்கள் குவிக்க திட்டமிட்டுள்ளனர்.

    ஆனால் ஆஸ்திரேலிய வீரர்கள் விக்கெட்டுகளுக்கு இடையில் விரைவாக ஓடி ரன் எடுப்பதில் அவ்வளவு சிறப்பாக செயல்படுவதில்லை. இதனால் உலகின் அதிவேக ஓட்டப்பந்தய வீரரான உசைன் போல்டிடம் விரைவாக எப்படி ஓடுவது என்பது குறித்து பயிற்சி எடுத்தனர்.

    உசைன் போல்டும் தொடக்கத்திலேயே அதிவிரைவாக ஓடுவது எப்படி குறித்து ஆலோசனைகளை ஆஸ்திரேலிய வீரர்களுக்கு வழங்கினார்.



    ஆஸ்திரேலிய வீரர்களுக்கு பயிற்சி அளித்தது குறித்து உசைன் போல்ட் கூறுகையில் ‘‘கிரிக்கெட் போட்டியில் நான் பார்த்த ஒரு விஷயம், அவர்கள் மிகவும் வேகமாக ஓடுவதில்லை. ஆஸ்திரேலிய வீரர்கள் ஓட்டத்தை தொடங்குவதில் மிகவும் குறைவான ரேட்டில்தான் உள்ளனர். சரியான பயிற்சி அவர்களுக்கு உதவியாக இருக்கும்’’ என்றார்.
    Next Story
    ×