search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோபினை வீழ்த்தி டிமிட்ரோவ் சாம்பியன்
    X

    உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப்: கோபினை வீழ்த்தி டிமிட்ரோவ் சாம்பியன்

    உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கோபினை 2-1 என வீழ்த்தி டிமிட்ரோவ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.
    ஏ.டி.பி. உலக டூர் இறுதி சுற்று எனப்படும் உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி லண்டனில் நடைபெற்றது. டாப்-8 வீரர்கள் மட்டுமே கலந்து கொண்ட இந்த தொடரின் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் 8-ம் நிலை வீரர் டேவிட் கோபின் (பெல்ஜியம்)- டிமிட்ரோவ் (பல்கேரியா) பலப்பரீட்சை நடத்தினார்கள்.

    தொடக்கத்தில் டேவிட் கோபின் ரபெல் நடால் மற்றும் ரோஜர் பெடரர் ஆகியோரை வீழ்த்தியிருந்ததால் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை வெல்லுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.



    ஆனால் டிமிட்ரோவ் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருவரும் முதல் செட்டியில் ஒருவருக்கொருவர் ஈடுகொடுத்து விளையாடினார்கள். இறுதியில் டிமிட்ரோவ் 7-5 என முதல் செட்டை கைப்பற்றினார்கள்.

    முதல் செட்டை இழந்த கோபின் 2-வது செட்டில் சுதாரித்துக்கொண்டு விளையாடினார். இதனால் 2-வது செட்டை 6-4 எனக்கைப்பற்றினார். ஆனால் வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை 3-6 என இழந்தார்.



    இதனால் டிமிட்ரோவ் 7-5, 4-6, 6-3 என கோபினை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். முதல் தொடரிலேயே இறுதிப் போட்டிக்கு நுழைந்த கோபின் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் ஏமாற்றம் அடைந்தார்.
    Next Story
    ×