search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரஞ்சி டிராபி: மகராஷ்டிராவை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது டெல்லி
    X

    ரஞ்சி டிராபி: மகராஷ்டிராவை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது டெல்லி

    ரஞ்சி டிராபி தொடரில் மகாராஷ்டிராவை இன்னிங்ஸ் மற்றும் 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி காலிறுதியை உறுதி செய்துள்ளது.
    ரஞ்சி டிராபி தொடரின் 6-வது லீக் ஆட்டம் நேற்றுமுன்தினம் (17-ந்தேதி) தொடங்கியது. டெல்லியில் நடைபெற்ற லீக் போட்டியில் டெல்லி - மகாராஷ்டிரா அணிகள் மோதின.

    டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி அணி முதல் இன்னிஙசில் 419 ரன்கள் குவித்தது. நிதிஷ் ராணா 174 ரன்களும், ரிஷப் பந்த் 99 ரன்களும் சேர்த்தனர். மகாராஷ்டிரா அணி சார்பில் பச்சவ் 4 விக்கெட்டும், குரானா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.


    டெல்லி பந்து வீச்சாளர் சைனி

    அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய மகாராஷ்டிரா 99 ரன்னில் சுருண்டது. இஷாந்த் சர்மா 3 விக்கெட்டும், சைனி, மனன் ஷர்மா மற்றும் லலித் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    99 ரன்னில் சுருண்டு பாலோ-ஆன் ஆன மகாராஷ்டிரா 2-வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடியது. 2-வது இன்னிங்சில் மகாராஷ்டிரா 259 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. இதனால் டெல்லி இன்னிங்சிஸ் மற்றும் 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி சார்பில் சைனி, விகாஸ் மிஷ்ரா தலா நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள். இந்த வெற்றியின் மூலம் டெல்லி காலிறுதி வாய்ப்பை உறுதி செய்துள்ளது.


    சதம் அடித்த கேரள வீரர் சஞ்சு சாம்சன்

    சவுராஷ்டிரா அணிக்கு 405 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது கேரளா. முதல் இன்னிங்சில் 68 ரன்கள் சேர்த்த சஞ்சு சாம்சன், 2-வது இன்னிங்சில் 175 ரன்கள் குவித்தார்.
    Next Story
    ×