search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொல்கத்தா டெஸ்ட்: டி.ஆர்.எஸ். சர்ச்சையில் சிக்கிய இலங்கை பேட்ஸ்மேன்
    X

    கொல்கத்தா டெஸ்ட்: டி.ஆர்.எஸ். சர்ச்சையில் சிக்கிய இலங்கை பேட்ஸ்மேன்

    கொல்கத்தாவில் நடைபெற்று வரும் முதல் டெஸ்டின்போது இலங்கை பேட்ஸ்மேன் டி.ஆர்.எஸ். கேட்கும் முன் டிரெஸ்ஸிங் அறையை பார்த்ததால் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா முதல் இன்னிங்சில் 172 ரன்னில் சுருண்டது. பின்னர் இலங்கை அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாள் ஆட்டத்தில் சண்டிமல் அவுட்டானதும் சுழற்பந்து வீச்சாளர் தில்ருவான் பெரேரா ஹெராத் உடன் ஜோடி சேர்ந்தார்.

    57-வது ஓவரை மொகமது ஷமி வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஷமி இன்-ஸ்விங்காக வீசினார். பந்து வலது கை பேட்ஸ்மேன் ஆன தில்ருவான் பெரேராவின் வலது காலை தாக்கியது. இதனால் இந்திய வீரர்கள் எல்.பி.டபிள்யூ அப்பீல் கேட்டனர்.

    உடனே நடுவர் நிகெல் லாங் எந்தவித யோசனையும் இல்லாமல் அவுட் கொடுத்தார். தில்ருவான் பெரேரா விளையாடிய ஸ்டிரைக்கின் பின்புறம்தான் இலங்கையின் டிரஸ்ஸிங் அறை இருந்தது. அவுட்டுதான் என்று நினைத்து டிரஸ்ஸிங் அறை நோக்கி நடக்க முற்சி செய்த தில்ருவான், டிரஸ்ஸிங் அறையை பார்த்த பின்னர் ரிவியூ கேட்டார்.



    ரிவியூ-வில் பந்து ஆஃப் சைடு பிட்ச் ஆனதால் நடுவர் அவுட் முடிவு திரும்பப்பெறப்பட்டது. இதனால் தில்ருவான் டக்அவுட்டில் இருந்து தப்பினார். பின்னர் 5 ரன்கள் எடுத்த நிலையில் மொகமது ஷமியின் 69-வது ஒவரின் கடைசி பந்தில் ஆட்டம் இழந்தார்.

    தில்ருவான் பெரேரா டிரஸ்ஸிங் அறையை பார்த்தது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு முன் பெங்களூரு டெஸ்டின்போது ஆஸ்திரேலியா கேப்டன் ஸ்மித் எல்.பி.டபிள்யூ-விற்கு எதிராக அப்பீல் கேட்களாமா? என்று டிரஸ்ஸிங் அறையை நோக்கி கேட்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த சம்பவம் ஒரு சீட்டிங் என கடுமையான சாடினார். எனது மூளை மங்கிவிட்டது (Brain Fade) என ஸ்மித் வருத்தம் தெரிவித்தார்.

    தற்போது தில்ருவான் சர்ச்சையில் சிக்கியுள்ள நிலையில், எதிர்முனையில் விளையாடிய ஹெராத், தில்ருவான் பெரேரா தவறு செய்யவில்லை என்று கூறியுள்ளார்.

    இதுகுறித்து ஹெராத் கூறுகையில் ‘‘இது ஒரு சிம்பிள் விஷயமாக நான் நினைக்கிறேன். நான் நடுவர் நிகெல் லாங்கிடம் ரிவியூவிற்காக கேட்டுக்கொண்டிருந்தேன். ஒருவேளை தில்ருவான் நான் கூறியதை கேட்டிருக்கலாம்.

    தில்ருவான் டிரஸ்ஸிங் அறையை நோக்கியதை நான் பார்க்கவில்லை. நான் நிகெல் லாங் உடன் பேசிக் கொண்டிருந்தேன். குறிப்பிட்ட சின்னல் டிரஸ்ஸிங் அறையில் இருந்து கொடுக்கப்படவில்லை’’ என்றார்.



    இதுகுறித்து புவனேஸ்வர்குமார் கூறுகையில் ‘‘போட்டிக்கான நடுவர் மற்றும் அம்பயர்களின் அதிகாரப்பூர்வ வார்த்தை வரும் வரை, நாம் அதுகுறித்து ஒருவார்த்தைக் கூட கூற இயலாது. இந்த சம்பவம் குறித்து கருத்துக் கூற நாங்கள் விரும்பவில்லை’’ என்றார்.

    இலங்கை கிரிக்கெட் வாரியமும் இந்த சர்ச்சையை மறுத்துள்ளது.
    Next Story
    ×