search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    லா லிகா: தொடரும் பார்சிலோனா வெற்றி; லேகனஸ் அணியை 3-0 என வீழ்த்தியது
    X

    லா லிகா: தொடரும் பார்சிலோனா வெற்றி; லேகனஸ் அணியை 3-0 என வீழ்த்தியது

    லா லிகா கால்பந்து தொடரில் முன்னணி அணியான பார்சிலோனா 3-0 என லெகனஸ் அணியை வீழ்த்தியது. சுவாரஸ் இரண்டு கோல்கள் அடித்தார்.
    லா லிகா கால்பந்து லீக் தொடரின் நேற்றைய ஆட்டம் ஒன்றில் முன்னணி அணியான பார்சிலோனா, லேகனஸ் அணியை எதிர்கொண்டது. இதில் சுவாரஸ் இரண்டு கோலும், பவுலினோ ஒரு கோலும் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.



    ஆட்டத்தின் 28-வது நிமிடத்தில் பார்சிலோனா வீரர் அடித்த பந்து லேகனஸ் கோல் கம்பத்தை நோக்கிச் சென்றது. அதை லேகனஸ் கோல் கீப்பர் சிறப்பாக தடுத்துவிட்டார். ஆனால் தடுத்த பந்து சுவாரஸ் நோக்கிச் செல்ல அதை சுவாரஸ் கோலாக மாற்றினார். சுவாரஸ் கோலால் முதல் பாதி நேரத்தில் பார்சிலோனா 1-0 என முன்னிலைப் பெற்றது.



    2-வது பாதி நேர ஆட்டத்திலும் பார்சிலோனா கையே ஓங்கியது. 60-வது நிமிடத்தில் முதல் கோல் அடித்ததுபோல் மீண்டும் ஒரு கோல் அடித்தார் சுவாரஸ். 90-வது நிமிடத்தில் பவுலினோ ஒரு கோல் அடிக்க பார்சிலோனா 3-0 என வெற்றி பெற்றது.



    இந்த வெற்றியின் மூலம் பார்சிலோனா 12 போட்டிகளில் 11 வெற்றியின் மூலம் 34 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறது. வாலென்சியா 27 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளது. அட்லெடிகோ மாட்ரிட் அணிக்கெதிரான போட்டியை டிரா செய்ததன் மூலம் ரியல் மாட்ரிட் 12 ஆட்டத்தில் 7 வெற்றி, 3 டிரா மூலம் 24 புள்ளிகள் பெற்று 3-வது இடத்தில் உள்ளது.
    Next Story
    ×