search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டோனியின் எதிர்காலத்தை தேர்வாளர்கள் மட்டுமே முடிவு செய்யனும்: கபில்தேவ்
    X

    டோனியின் எதிர்காலத்தை தேர்வாளர்கள் மட்டுமே முடிவு செய்யனும்: கபில்தேவ்

    இந்திய அணியின் விக்கெட் கீப்பராக செயல்பட்டு வரும் மகேந்திர சிங் டோனியின் எதிர்காலத்தை தேர்வாளர்கள் மட்டுமே முடிவு செய்யனும் என கபில்தேவ் கூறியுள்ளார்.
    இந்திய அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற இவர், இந்த வருட தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 அணி கேப்டன் பதவியில் இருந்து விலகி, விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக விளையாடி வருகிறார்.

    சமீப காலகமாக டோனி ஓய்வு பெற வேண்டும் என்ற விமர்சனம் எழுந்துள்ளது. நியூசிலாந்து டி20 தொடரின்போது, 2-வது போட்டியில் அவர் மோசமாக விளையாடினார். இதனால் டோனி இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் எனற விமர்சனம் கடுமையாக எழும்பியது.

    இந்நிலையில், டோனியின் ஓய்வு முடிவை தேர்வாளர்கள் மட்டுமே முடிவு செய்யனும் என கபில்தேவ் கூறியுள்ளார்.



    டோனியின் ஓய்வு குறித்து கபில்தேவ் கூறுகையில் ‘‘எந்த வீரரும் அவருடைய வாழ்நாள் முழுவதும் விளையாட முடியாது. ஆனால், டோனி சிறப்பாக விளையாடி வருகிறார். அவரது முடிவை தேர்வாளர்களிடம் விட்டு விடுகிறேன். நாம் என்ன செய்கின்றமோ அதைவிட தேர்வாளர்கள் சிறந்த வேலையை செய்வார்கள்.

    நான் ஏதாவது சென்னால் அது மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்திவிடும். அதைச் செய்ய நான் விரும்பவில்லை. தேர்வாளர்கள்தான் அதை செய்ய வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×