search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? கோவாவுடன் நாளை மோதல்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? கோவாவுடன் நாளை மோதல்

    ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டியின் 3-வது ‘லீக்’ ஆட்டத்தில் சென்னை அணி கோவாவுடன் நாளை மோதுகிறது. சென்னை அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
    சென்னை:

    ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டியின் 4-வது தொடர் கொச்சியில் நேற்று தொடங்கியது.

    தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் அட்லெ டிகோ கொல்கத்தா- கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

    கவுகாத்தியில் இன்று நடைபெறும் 2-வது ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடட்- ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதுகின்றன.

    3-வது ‘லீக்’ ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நாளை (19-ந்தேதி) மாலை 5.30 மணிக்கு நடக்கிறது. இதில் சென்னையின் எப்.சி.- கோவா அணிகள் மோதுகின்றன.

    இரு அணிகளும் ஐ.எஸ்.எல். தொடரில் 6 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இதில் சென்னை 3 ஆட்டத்திலும், கோவா 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்றன. 2015-ம் ஆண்டு சாம்பியன் சென்னையின் எப்.சி. வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது. உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு கூடுதல் பலமாகும்.

    கடந்த 3 சீசனிலும் சென்னையின் எப்.சி. அணிக்கு மட்டெராசி (இத்தாலி) பயிற்சியாளராக இருந்தார். இந்த சீசனில் இருந்து இங்கிலாந்தை சேர்ந்த ஜான் கிரேக்கோரி தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார்.

    கடந்த முறை அரை இறுதிக்கு நுழையாத சென்னை அணி இந்த தடவை அடுத்த சுற்றுக்கு முன்னேறுவதை இலக்காக கொண்டுள்ளது.
    Next Story
    ×