search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    18 வயதில் 7-வது போட்டிகளில் 5 சதம்: மும்பை வீரர் ப்ரித்வி ஷா அசத்தல்
    X

    18 வயதில் 7-வது போட்டிகளில் 5 சதம்: மும்பை வீரர் ப்ரித்வி ஷா அசத்தல்

    18 வயதில் 7 போட்டிகளில் மட்டுமே பங்கேற்று 5 சதங்கள் அடித்து மும்பை வீரர் ப்ரித்வி ஷா அசத்தியுள்ளார். இந்த வயதில் சச்சினை 7 சதங்கள் அடித்துள்ளார்.
    மும்பையைச் சேர்ந்த இளம் பேட்ஸ்மேன் ப்ரித்வி ஷா. 18 வயது முடிவடைந்து 8 நாட்கள் ஆகும் இவர் கடந்த ஆண்டு தனது 17-வது வயதில் மும்பை அணிக்காக அறிமுகமானார். ரஞ்சி டிராபி அரையிறுதியில் தமிழக அணிக்கெதிராக தனது அறிமுக போட்டியிலேயே சதம் அடித்து அசத்தினார். அதன்பின் துலீப் டிராபி இறுதிப் போட்டியிலும் சதம் அடித்தார்.

    இதனால் இந்தியா அளவில் பிரபலம் ஆனார். இந்நிலையில் 2017-18 சீசன் ரஞ்சி டிராபியின் 6-வது லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கியது.



    ஒரு போட்டியில் மும்பை - ஆந்திரா அணிகள் மோதி வருகின்றன. டாஸ் வென்ற ஆந்திர அணி பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய மும்பை முதல் நாள் ஆட்ட முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் சேர்த்துள்ளது.



    ப்ரித்வி ஷா அபாரமாக விளையாடி சதம் அடித்தார். இவர் 173 பந்தில் 14 பவுண்டரி, 1 சிக்சருடன் 114 ரன்கள் சேர்த்தார். இது அவரின் 7-வது முதல்தர போட்டியாகும்.



    7 போட்டியில் 5 சதங்கள் விளாசி அசத்தியுள்ளார். இதற்கு முன் சச்சின் தெண்டுல்கர் தனது 18 வயதில் 7 சதங்கள் அடித்துள்ளார். இதுதான் சாதனையாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு சதங்கள் அடித்தார் ப்ரித்வி ஷா சச்சின் சாதனையை சமன் செய்ய வாய்ப்புள்ளது.
    Next Story
    ×