search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தகுதி பெறுவதற்கு முன்பே ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்து இத்தாலி ஏமாற்றம்
    X

    தகுதி பெறுவதற்கு முன்பே ஓட்டல் அறைகளை முன்பதிவு செய்து இத்தாலி ஏமாற்றம்

    ரஷிய உலகக்கோப்பை கால்பந்து தொடருக்கு எப்படியும் தகுதி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கையில் இத்தாலி அணி ஒட்டல் அறைகளை முன்பதிவு செய்து வைத்து ஏமாற்றம் அடைந்துள்ளது.
    ரஷியாவில் அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து தொடர் நடைபெற இருக்கிறது. போட்டியை நடத்தும் ரஷியாவைத் தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடிதான் தகுதி பெற வேண்டும். ஐரோப்பிய நாடுகளுக்கிடையிலான குரூப் 1 தகுதிச் சுற்று முடிவில் இத்தாலி தகுதி பெறவில்லை. இதனால் பிளேஆஃப் சுற்றில் விளையாடி அதில் வெற்றி பெற்றால்தான் தகுதிபெற முடியும் என்ற நிலை ஏற்பட்டது.

    பிளேஆஃப் சுற்றில் இத்தாலி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. சுவீடனில் நடைபெற்ற முதல் லெக்கில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்றது. இத்தாலியில் நடைபெற்ற 2-வது லெக் ஆட்டம் கோல்களின்றி டிராவில் முடிந்தது. இரண்டு போட்டியையும் கணக்கிட்டு சுவீடன் 1-0 என வெற்றி பெற்று உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றது.



    சுமார் 60 ஆண்டுகள் கழித்து இத்தாலி உலகக்கோப்பை தகுதி பெற முடியாமல் போனது. நான்கு முறை உலகக்கோப்பையை கைப்பற்றிய அந்த அணிக்கு இது பெரிய ஏமாற்றத்தை கொடுத்துள்ளது.

    எப்படியும் ரஷிய உலகக்கோப்பைக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நம்பிக்கையில் பிளேஆஃப் சுற்று தொடங்குவதற்கு முன்பே ரஷியாவில் இத்தாலி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் தங்குவதற்காக இத்தாலி கால்பந்து பெடரேசன் சார்பில் ஓட்டல்கள் அறைகளை முன்பதிவு செய்து வைக்கப்பட்டது. தற்போது தகுதி பெறாததால் இத்தாலி ஏமாற்றம் அடைந்ததுள்ளது.



    அயர்லாந்து அணியை வீழ்த்தி டென்மார்க் உலகக்கோப்பை தொடருக்கு தகுதிப் பெற்றுள்ளது. டென்மார்க் அணி இத்தாலி கால்பந்து பெடரேசன் முன்பதிவு செய்துள்ள அறைகளை பயன்படுத்த முயற்சி செய்து வருகிறது. இதை டென்மார்க் கால்பந்து பெடரேசன் உறுதி செய்துள்ளது.
    Next Story
    ×