search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கடினமான ஆடுகளம்: சஞ்சய் பாங்கர் மகிழ்ச்சி
    X

    கடினமான ஆடுகளம்: சஞ்சய் பாங்கர் மகிழ்ச்சி

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் விளையாடுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் கூறினார்.
    இந்திய கிரிக்கெட் அணி, இலங்கை தொடர் முடிந்ததும் உடனடியாக தென்ஆப்பிரிக்காவுக்கு சென்று டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அங்குள்ள ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமானவை. எனவே அந்த தொடருக்கு தயாராவதற்காகவே கொல்கத்தா ஆடுகளமும் வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கொல்கத்தா டெஸ்டில் முதல் நாள் ஆட்டத்திற்கு பிறகு இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர் நிருபர்களிடம் கூறுகையில், ‘இது போன்ற ஆடுகளங்களில் (பிட்ச்) விளையாடுவது மகிழ்ச்சி தான். உண்மையிலேயே எளிதான சூழலில் ஆடுவதை நாங்கள் விரும்புவதில்லை. பெரும்பாலான வீரர்கள் இத்தகைய சவாலை சந்திப்பதில் ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

    ஒரு அணியாக தொடர்ந்து முன்னேற்றம் காண விரும்புகிறோம். ஆனால் அடிக்கடி மழை குறுக்கிட்டதால் பேட்ஸ்மேன்கள் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவதில் பாதிப்பு ஏற்பட்டது. இரு அணிகளும் ஏற்றுக்கொண்டதால் மின்னொளி பயன்படுத்தப்பட்டது. ஆனால் இத்தகைய சூழலில் சிவப்பு நிற பந்தை எதிர்கொள்வது மிகவும் கடினமாகும்’ என்றார்.
    Next Story
    ×