search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அசத்தல்; ஸ்டோன்மேன் சதம்
    X

    ஆஷஸ் பயிற்சி ஆட்டம்: இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் அசத்தல்; ஸ்டோன்மேன் சதம்

    ஆஷஸ் தொடருக்கான பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஸ்டோன்மேன் சதம் அடித்து அசத்தியுள்ளார். குக், ஜோ ரூட்டும் சிறப்பான ஆட்டம்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது.

    இந்த தொடருக்கு முன்னோட்டமாக இங்கிலாந்து மூன்று பயிற்சி ஆட்டத்தில் விளையாட திட்டமிட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில், கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான நான்கு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் நேற்று தொடங்கியது.

    டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலிய லெவன் அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்தின் நேர்த்தியான பந்து வீச்சால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் கேப்டன் ஷார்ட் அதிகபட்சமாக 51 ரன்கள் சேர்த்தார். இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி மேலும் ரன்கள் எடுத்து 250 ரன்னில் ஆல்அவுட் ஆனது.

    இங்கிலாந்து அணி சார்பில் கிறிஸ் வோக்ஸ் 6 விக்கெட்டுக்கள் அள்ளினார். பின்னர் இங்கிலாந்து முதல் இன்னிங்சை தொடங்கியது. அலஸ்டைர் குக், ஸ்டோன்மேன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.



    இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். குக் 70 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். ஸ்டோன்மேன் 111 ரன்கள் குவித்தார். அடுத்த வந்த வின்ஸ் 26 ரன்னில் வெளியேற, ஜோ ரூட், மலன் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள்.

    இருவரும் அரைசதம் அடிக்க இங்கிலாந்து அணி 2-வது நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 337 ரன்கள் குவித்துள்ளது. ஜோ ரூட் 62 ரன்னுடனும், மலன் 57 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். பந்து வீச்சாளர் கிறிஸ் வோக்ஸ் சிறப்பாக பந்து வீசிய நிலையில் நான்கு பேட்ஸ்மேன்கள் அரைசதம் தாண்டியது அந்த அணிக்கு ஊக்கத்தை கொடுத்துள்ளது.
    Next Story
    ×