search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.எஸ்.எல். கால்பந்து நாளை தொடக்கம்
    X

    ஐ.எஸ்.எல். கால்பந்து நாளை தொடக்கம்

    நான்காவது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி கொச்சியில் நாளை தொடங்கயிருக்கும் நிலையில் கூடுதலாக இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
    கொல்கத்தா:

    ஐ.எஸ்.எல். என்று அழைக்கப்படும் இந்தியன் சூப்பர் ‘லீக்’ கால்பந்து போட்டி 2014-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் அட்லெடிகோ கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெற்றது. 2015-ம் ஆண்டு நடந்த போட்டியில் சென்னையின் எப்.சி. அணியும், 2016-ம் ஆண்டு போட்டியில் கொல்கத்தாவும் வெற்றி பெற்றன.

    4-வது ஐ.எஸ்.எல். கால்பந்து போட்டி கொச்சியில் நாளை (17-ந்தேதி) தொடங்குகிறது. இதுவரை நடந்த 3 போட்டியிலும் 8 அணிகளே பங்கேற்றன. இந்தப்போட்டியில் கூடுதலாக 2 அணிகள் சேர்க்கப்பட்டுள்ளன. பெங்களூர், ஜாம் ஷெட்பூர் அணிகள் இதில் புதிதாக விளையாடுகின்றன.

    இந்தப்போட்டியில் விளையாடும் 10 அணிகள் விவரம் வருமாறு:-



    அட்லெடிகோ கொல்கத்தா (2 முறை சாம்பியன்), சென்னையின் எப்.சி. (ஒரு முறை சாம்பியன்), டெல்லி டைனமோஸ், கேரளா பிளாஸ்டர்ஸ், கோவா, புனே, மும்பை சிட்டி கிளப், நார்த் ஈஸ்ட் யுனைடட் (கவுகாத்தி), பெங்களூர், ஜாம்ஷெட்பூர்.

    இந்தப்போட்டியில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். அதன்படி ஒவ்வொரு அணியும் 18 ஆட்டத்தில் விளையாடும்.

    அடுத்த ஆண்டு மார்ச் 4-ந்தேதி வரை ‘லீக்’ ஆட்டம் 10 நகரங்களில் நடைபெறும். ‘லீக்’ முடிவில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி சுற்று ‘லீக்’ ஆட்டத்துக்கு தகுதி பெறும். முதல் இடத்தை பிடித்த அணியும் 4-வது இடத்தை பிடித்த அணியும், 2-வது இடத்தை பிடித்த அணியும், 3-வது இடத்தை பிடித்த அணியும் 2 முறை மோதும். இதில் இருந்து 2 அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். மார்ச் 17-ந்தேதி இறுதிப் போட்டி கொல்கத்தாவில் நடக்கிறது.

    நாளை இரவு 8 மணிக்கு கொச்சியில் நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா-கேரளா அணிகள் மோதுகின்றன.

    சென்னையின் எப்.சி. அணி தொடக்க ஆட்டத்தில் கோவாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் 19-ந்தேதி மாலை 5.30 மணிக்கு நடக்கிறது.
    Next Story
    ×