search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆஷஸ் தொடர்: மிட்செல் ஜான்சன் 2.0 ஆக விரும்புகிறேன்- பேட் கம்மின்ஸ்
    X

    ஆஷஸ் தொடர்: மிட்செல் ஜான்சன் 2.0 ஆக விரும்புகிறேன்- பேட் கம்மின்ஸ்

    ஆஷஸ் தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக மிட்செல் ஜான்சன் 2.0 ஆக விரும்புகிறேன் என்று ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பேட் கம்மின்ஸ் கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் தொடர் 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த தொடரில் வேகப்பந்து வீச்சாளர் முக்கிய ஆயுதமாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆஸ்திரேலியாவில் மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் மற்றும் ஹசில்வுட் ஆகியோர் இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.



    2013-14-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ஆஷஸ் தொடரில் இங்கிலாந்து 0-5 என படுதோல்வியடைந்தது. அதற்கு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஜான்சன் முக்கிய காரணமாக இருந்தார்.

    ஜான்சன் 37 விக்கெட்டுக்கள் வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை முற்றிலும் சீர்குலைத்தார். ஜான்சன் 2013-14-ல் செயல்பட்டதுபோல், தற்போது நான் இருக்க விரும்புகிறேன் என்று பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார்.



    ஆஷஸ் தொடர் குறித்து பேட் கம்மின்ஸ் கூறுகையில் ‘‘2013-14 ஆஷஸ் தொடரிலி மிட்செல் ஸ்டார்க் என்ன செய்தார் என்பதை நாம் பார்த்தோம். அவர் செய்த முக்கிய ரோலை, நான் செய்ய விரும்புகிறேன்’’ என்றார்.
    Next Story
    ×