search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்காள தேச பிரிமீயர் லீக்: 19 பந்தில் அரைசதம் அடித்தார் பொல்லார்டு
    X

    வங்காள தேச பிரிமீயர் லீக்: 19 பந்தில் அரைசதம் அடித்தார் பொல்லார்டு

    வங்காள தேச பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அதிரடி மன்னன் பொல்லார்டு 19 பந்தில் அரைசதம் அடித்துள்ளார்.
    வங்காள தேச கிரிக்கெட் வாரியம் சார்பில் வங்காள தேச பிரிமீயர் டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. டாக்காவில் இன்று நடைபெற்ற போட்டி ஒன்றில் டாக்கா டைனமிட்ஸ் - டைட்டன்ஸ் அணிகள் மோதின. டைனமிட்ஸ் அணி டாஸ் வென்ற பீல்டிங் தேர்வு செய்தது. அதன்படி டைட்டன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து 5 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் சேர்த்தது.

    பின்னர் 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டாக்கா டைனமிட்ஸ் அணி களம் இறங்கியது. டைனமிட்ஸ் அணி சார்பில் பொல்லார்டு 19 பந்தில் அரைசதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து விளையாடிய அவர் 24 பந்தில் 55 ரன்கள் குவித்தார். அதில் 3 பவுண்டரி, 6 சிக்சர்கள் அடங்கும்.



    இவர் அவுட்டானதும் டைனமிட்ஸ் அணிக்கு நெருக்கடி ஏற்பட்டது. பின்னர் ஒரு பந்து மீதமுள்ள நிலையில் 6 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    Next Story
    ×