search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கரேத் பேலே-ஐ விடுவிக்க ரியல் மாட்ரிட் முடிவு: கிலியன் பப்பேவிற்கு குறி வைக்கிறது
    X

    கரேத் பேலே-ஐ விடுவிக்க ரியல் மாட்ரிட் முடிவு: கிலியன் பப்பேவிற்கு குறி வைக்கிறது

    காயத்தால் அவதிப்பட்டு வரும் கரேத் பேலே-ஐ விற்க ரியல் மாட்ரிட் முடிவு செய்துள்ளது. அவருக்குப் பதிலாக கிலியன் பப்வேவை வாங்க முயற்சி செய்கிறது.
    ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகளில் முக்கியமான ஒன்றாக கருதப்படுவது ரியல் மாட்ரிட். கடந்த சீசனில் ஐரோப்பிய சாம்பியன் லீக் மற்றும் லா லிகா ஆகியவற்றை கைப்பற்றி அசத்தியது.

    அந்த அணியில் கிறிஸ்டியானோ ரொனால்டோ உடன் இணைந்து முக்கிய வீரராக வேல்ஸ் நாட்டின் கரேத் பேலே திகழ்ந்து வருகிறார். கடந்த 2013-ம் ஆண்டு டோட்டன்ஹாம் அணியில் இருந்து 85 மில்லியன் பவுண்டுக்கு கரேத் பேலே-ஐ ரியல் மாட்ரிட் அணி வாங்கியது.



    தற்போது காயத்தால் கரேத் பேலே அவதிப்பட்டு வருகிறா். 28 வயதாகும் பேலே செப்டம்பர் 19-ந்தேதியில் இருந்து ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடவிலலை. காயம் குணமடைய மேலும் நாட்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய நிலை உள்ளது. கடந்த நான்கு ஆண்டுகளில் 19 காயத்திற்கு உள்ளாகியுள்ளார்.

    இதனால் அவரை விற்க ரியல் மாட்ரிட் முடிவு செய்துள்ளது. அதேவேளையில் மொனாக்கோ அணியில் இருந்து பி.எஸ்.ஜி. (பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன்) அணிக்காக லோன் அடிப்படையில் சென்றுள்ள கிலியன் பப்பேவை வாங்க ரியல் மாட்ரிட் விரும்புகிறது.



    பப்வேவை ரியல் மாட்ரிட் வாங்குவது அவ்வளவு சுலபம் அல்ல. அவருக்காக சுமார் 178 மில்லியன் பவுண்டு செலவழிக்க வேண்டியதிருக்கும். இந்த வருடம் நெய்மரை அதிக விலை கொடுத்து பி.எஸ்.ஜி. வாங்கியுள்ளது. இதனால் அடுத்த வருடம் பப்வேவை வாங்க முயற்சி செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×