search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு
    X

    பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் ஓய்வு

    பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்த சயீத் அஜ்மல் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    பாகிஸ்தான் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளராக திகழ்ந்தவர் சயீத் அஜ்மல். 40 வயதாகும் இவர் 2008-ம் ஆண்டு ஆசியக் கோப்பை தொடரின்போது பாகிஸ்தான் அணியில் அறிமுகமானார். 2011-ம் ஆண்டில் இருந்து மிஸ்பா-உல்-ஹக் கேப்டன் பதவியின் கீழ் முக்கியமான பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    35 டெஸ்ட் போட்டிகளில் 178 விக்கெட்டுக்கள் சாய்த்துள்ளார். 2011-12-ல் இங்கிலாந்து அணியை ஒயிட்வாஷ் செய்யும்போது அஜ்மல் 3 போட்டியில் 24 விக்கெட்டுக்கள் கைப்பற்றியிருந்தார். டெஸ்ட் போட்டியை தவிர 113 ஒருநாள் போட்டியில் 184 விக்கெட்டுக்களும், 64 டி20 கிரிக்கெட்டில் 85 விக்கெட்டுக்களும் வீழ்த்தியுள்ளார்.



    சிறப்பாக பந்து வீசிய அஜ்மல் கிரிக்கெட் வாழ்க்கையில், பந்து வீச்சு முறையில் சந்தேகம் மூலம் புயல் வீச ஆரம்பித்தது. 2009-ம் ஆண்டு மற்றும் 2014-ம் ஆண்டு இவர் ஐ.சி.சி. விதிமுறைக்கு மாறாக பந்து வீசுகிறார் எனக்குற்றம் சாட்டப்பட்டது.

    இதனால் ஐ.சி.சி. அவருக்கு பந்து வீச தடைவிதித்தது. அப்போது ஒருநாள் கிரக்கெட் போட்டிக்கான தரவரிசையில் நம்பர்-1 இடத்தில் இருந்தார். டெஸ்ட், டி20 கிரிக்கெட் தரவரிசையில் முதல்ட10 இடத்திற்குள் இருந்தார். இந்த காலக்கட்டத்தில் அஜ்மல் வீழ்த்தி விக்கெட் அளவிற்கு யாரும் விக்கெட்டுக்கள் வீழ்த்தவில்லை.



    தடையால் இதனால் கிரிக்கெட் வாழ்க்கை மங்கியது. உள்ளூர் கிரிக்கெட் தொடரில் மட்டுமே இடம்பிடித்து வந்தார். இந்த மாதம் நடைபெறும் உள்ளூர் தொடர் முடிந்தவுடன் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் இருந்து ஓய்வு பெற இருக்கிறார்.
    Next Story
    ×