search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒன்றரை வருடத்தில் 30 ஒருநாள், 25 டி20, 3 டெஸ்ட்: நான்தான் ஓய்வு கேட்டேன்- ஹர்திக் பாண்டியா
    X

    ஒன்றரை வருடத்தில் 30 ஒருநாள், 25 டி20, 3 டெஸ்ட்: நான்தான் ஓய்வு கேட்டேன்- ஹர்திக் பாண்டியா

    ஒன்றரை வருடத்தில் 30 ஒருநாள், 23 டி20 மற்றும் 3 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக விளையாடியதால் நான்தான் ஓய்வு கேட்டேன் என்று ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார்.
    இந்திய அணியின் நம்பிக்கை நட்டசத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டராக ஹர்திக் பாண்டியா திகழ்ந்து வருகிறார். பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் ஆகிய மூன்று துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இந்திய அணியில் தொடர்ச்சியாக இடம்பிடித்திருந்தார். 30 ஒருநாள் கிரிக்கெட், 23 டி20 கிரிக்கெட் மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

    இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் கொல்கத்தாவில் தொடங்குகிறது. இதற்கான இந்திய அறிவிக்கப்பட்டபோது ஹர்திக் பாண்டியா பெயர் இடம்பெறவில்லை. அவருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

    ஆனால், கிரிக்கெட் விமர்சகர்களுக்கு ஹர்திக் பாண்டியாவை நீக்கியது ஆச்சர்யத்தை அளித்தது. அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை. தென்ஆப்பிரிக்கா தொடருக்கு தயாராகும் வகையில் எப்படி நீக்கினார்கள்? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.



    இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தொடர்ந்து விளையாடி வருகிறேன். தற்போது நான் 100 சதவீதம் உடற்தகுதியுடன் இல்லை. இதனால் நான்தான் ஓய்வு கேட்டேன் என்று ஹர்திக் பாண்டியா தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘உண்மையை சொல்வ வேண்டுமேன்றால், நான்தான் ஓய்வு கேட்டேன். எனது உடல் 100 சதவீதம் பிட்-ஆக இல்லை. என் உடல் 100 சதவீதம் பிட்டாக இருந்து, என்னுடைய பங்களிப்பை 100 சதவீதம் கொடுக்கும்போது விளையாட விரும்புகிறேன்.

    என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் குறுகிய நாட்களுக்குள் இப்படி அதிகப்படியான போட்டியில் விளையாடியது கிடையாது. ஒரு ஆல்ரவுண்டராக இது கடினமானது. நான் பந்து வீசுகிறேன். பேட்டிங் செய்கிறேன். அதேபோல் சிறந்த முறையில் பீல்டிங் செய்கிறேன். தற்போதைய நிலையில் என்னுடைய வேலைப்பழுவை மானேஜிங் செய்வது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனென்றால், நான் இதுபோன்று அதிக போட்டியில் விளையாடியது கிடையாது.



    இந்த ஒய்வு எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம். உண்மையிலேயே, ஓய்வுக்கு அர்த்தம் நான் ஜிம்மில் பயிற்சிக்காக சென்று கொண்டிருக்கிறேன் என்பதுதான். அங்கு என்னுடைய உடற்தகுதியை வளர்த்துக் கொண்டு மீண்டும் சரியாக பிட் உடன் திரும்புவேன்.

    தென்ஆப்பிரிக்கா தொடரில் பங்கேற்பதற்காக உற்சாகமாக இருக்கிறேன். தென்ஆப்பிரிக்கா தொடருக்காக சிறந்த வகையில் தயாராக இருக்க ஓய்வை விரும்பினேன். என்னார் விரைவாக திரும்ப முடியும்’’ என்றார்.
    Next Story
    ×