search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தோல்வி எதிரொலி: இத்தாலி கோல்கீப்பர் பஃபன் ஓய்வு
    X

    உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தோல்வி எதிரொலி: இத்தாலி கோல்கீப்பர் பஃபன் ஓய்வு

    உலகக்கோப்பை தகுதிச் சுற்றில் தோல்வியடைந்ததால் இத்தாலியின் முன்னணி கோல் கீப்பரான பஃபன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார்.
    கால்பந்து விளையாட்டில் இத்தாலி தலைசிறந்த அணிகளில் ஒன்று. எந்தவொரு அணியாக இருந்தாலும் பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரில் விளையாட வேண்டுமென்றால் போட்டியை நடத்தும் அணியை தவிர மற்ற அணிகள் தகுதிச் சுற்றில் விளையாடி அதன்பின்தான் தகுதி பெற முடியும்.

    குரூப் 1 போட்டியில் இத்தாலி தகுதி பெற தவறியது. இதனால் பிளேஆஃப் சுற்றில் விளையாட வேண்டிய நிலை ஏற்பட்டது. பிளேஆஃப் சுற்றில் இத்தாலி ஸ்வீடன் அணியை எதிர்கொண்டது. லெக்-1, லெக்-2 என இரண்டுமுறை இரு அணிகளும் தங்களுக்கு சொந்தமான மைதானத்தில் தலா ஒருமுறை மோத வேண்டும்.

    இரண்டு போட்டியிலும் சேர்த்து அதிக கோல்கள் அடித்த அணி வெற்றி பெறும். வெற்றிபெற்ற அணி அடுத்த ஆண்டு ரஷியாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பையில் விளையாட தகுதி பெறும்.

    அந்த வகையில் ஸ்வீடனுக்கு சொந்தமான மைதானத்தில் நடந்த முதல் லெக்கில் ஸ்வீடன் 1-0 என வெற்றி பெற்றது. நேற்று நள்ளிரவு இத்தாலிக்கு சொந்தமான மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இரு அணிகளும் கோல்கள் அடிக்கவில்லை. போட்டி 0-0 என டிராவில் முடிந்ததால் ஸ்வீடன் 1-0 என்ற கோல் அடிப்படையில் உலகக்கோப்பைக்கு தகுதி பெற்றது.



    இதனால் இத்தாலி உலகக்கோப்பையில் பங்கேற்க இயலாத பரிதாப நிலை ஏற்பட்டது. 1958-ம் ஆண்டுக்குப் பிறகு சுமார் 60 ஆண்டுகள் கழித்து இத்தாலி தகுதிபெறவில்லை. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று இத்தாலி அணியின் மட்டுமல்ல உலகளவில் தலைசிறந்த கோல்கீப்பராக திகழும் 39 வயதான பஃபன் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். நான்கு முறை உலகக்கோப்பை தொடரில் விளையாடிய பஃபன், ஐந்தாவது முறையாக பங்கேற்று உலக சாதனை படைக்கும் வாய்ப்பு பறிபோனது.

    நான்கு முறை உலகக்கோப்பையை கைப்பற்றிய இத்தாலி, 2019-ம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறாதது துரதிருஷ்டவசமே.
    Next Story
    ×