search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலங்கை டெஸ்ட் தொடரில் கங்குலி சாதனையை கோலி முறியடிக்க வாய்ப்பு
    X

    இலங்கை டெஸ்ட் தொடரில் கங்குலி சாதனையை கோலி முறியடிக்க வாய்ப்பு

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தாவில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது. இந்த டெஸ்ட் தொடரில் கங்குலியின் சாதனையை விராட்கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது.
    சென்னை:

    இலங்கை கிரிக்கெட் அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

    இந்தியா - இலங்கை அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் வருகிற 16-ந்தேதி தொடங்குகிறது.

    இந்த டெஸ்ட் தொடரில் கங்குலியின் சாதனையை விராட்கோலி முறியடிக்க வாய்ப்பு உள்ளது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி 3-0 என்ற கணக்கில் முழுமையாக (ஒயிட்வாஷ்) கைப்பற்றும் போது வீராட் கோலி இந்த சாதனையை முறியடிப்பார்.

    இந்திய கேப்டன்களில் தொடர்ந்து அதிக வெற்றி பெற்றவர்களில் 2-வது இடத்தில் இருக்கிறார் கங்குலி. அவரது தலைமையில் இந்திய அணி 21 டெஸ்டில் வெற்றி பெற்று இருக்கிறது. விராட்கோலி 19 வெற்றியுடன் 3-வது இடத்தில் உள்ளார்.

    இலங்கைக்கு எதிராக 3 டெஸ்டிலும் வெல்லும்போது அவர் 22 வெற்றியுடன் 2-வது இடத்துக்கு முன்னேறுவார். டோனி 27 வெற்றியுடன் முதல் இடத்தில் உள்ளார்.

    விராட்கோலி அணி சமீபத்தில் இலங்கை சுற்றுப்பயணத்தில் 3 டெஸ்டிலும் வென்று ஒயிட்வாஷ் செய்து இருந்தது. தற்போது சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த முறையும் முழுமையாக டெஸ்ட் தொடரை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி உள்ளது.

    மேலும் 2015-ம் அண்டு ஆகஸ்டில் இலங்கை பயணத்தின்போது டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இருந்தது.

    ஒருவேளை விராட்கோலி 3-வது டெஸ்டில் விளையாட முடியாமல் ஓய்வு எடுத்தால் கங்குலியின் சாதனையை முறியடிப்பதில் தாமதம் ஏற்படலாம். அடுத்த டெஸ்ட் தொடர் வரை காத்திருக்க வேண்டும்.

    மேலும் இலங்கை அணி ‘டிரா’ செய்யும் வகையில் விளையாடினாலும் கோலியின் புதிய சாதனை தாமதமாகும்.
    Next Story
    ×