search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஃபெட் கோப்பை டென்னிஸ்: பெலாரஸை வீழ்த்தி அமெரிக்கா சாம்பியன்
    X

    ஃபெட் கோப்பை டென்னிஸ்: பெலாரஸை வீழ்த்தி அமெரிக்கா சாம்பியன்

    ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடரில் பெலாரஸ் அணியை வீழ்த்தி அமெரிக்கா 18-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.
    ஃபெட் கோப்பை டென்னிஸ் தொடரில் அமெரிக்கா - பெலாரஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இரு அணிகளும் தலா இரண்டு வெற்றிகள் மூலம் டிராவில் இருந்த நிலையில் இரட்டையர் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

    அமெரிக்கா அணியில் ஷெல்பி ரோஜர்ஸ் - கோகோ வாண்டேவெஜ்ஹே களம் இறங்கினார்கள். பெலாரஸ் அணியில் அரினா சபாலென்கோ - அலியாக்சன்ட்ரா சஸ்னோவிச் களம் இறங்கினார்கள்.



    முக்கியமான இந்த போட்டியில் அமெரிக்க ஜோடி 6-3, 7(7) - 6(3) நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது. இந்த வெற்றியின் மூலம் அமெரிக்கா ஃபெட் கோப்பையை 18-வது முறையாக கைப்பற்றியுள்ளது.
    Next Story
    ×