search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ரென்ஷா செய்தித்தாள்களை தவிர்க்க வேண்டும்: டேவிட் வார்னர்
    X

    ரென்ஷா செய்தித்தாள்களை தவிர்க்க வேண்டும்: டேவிட் வார்னர்

    ஆஷஸ் தொடரில் தொடக்க வீரராக களம் இறங்க இருக்கும் ரென்ஷா செய்தித்தாள்களை தவிர்க்க வேண்டும் என வார்னர் அறிவுரை கூறியுள்ளார்.
    ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் தொடர் வருகிற 23-ந்தேதி பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இங்கிலாந்து அணி பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வரும் நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளூர் தொடரான ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் விளையாடி வருகிறார்கள்.

    ஆஸ்திரேலிய அணியின் துணைக் கேப்டனான வார்னர் தொடக்க வீரராக களம் இறங்குவார். அவருடன் 21 வயதான இளம் வீரர் ரென்ஷா களம் இறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இளம் வீரரான ரென்ஷா 10 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். சராசரி 36.64 வைத்துள்ளார். இந்தியாவிற்கு எதிரான தொடரில் சுழற்பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்டு விளையாடினார்.

    தற்போது ஷெஃப்பீல்டு ஷீல்டு தொடரில் குயின்ஸ்லாந்து அணிக்காக விளையாடி வரும் ரென்ஷா ரன்கள் குவிக்க திணறி வருகிறார். நான்கு இன்னிங்சில் 20 ரன்களை கூட தாண்டவில்லை. ரென்ஷாவின் ஆட்டம் குறித்து தேர்வாளர்கள் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவலைப்படவில்லை. ஆனால் உள்ளூர் பத்திரிகைகள் கண்காணித்து வருகிறது. ரென்ஷாவின் மோசமான ஃபார்ம் குறித்து எழுத வாய்ப்புள்ளது.



    இந்நிலையில்தான் ரென்ஷா பத்திரிகைகளை தவிர்க்க வேண்டும் என்று வார்னர் அறிவுறுத்தியுள்ளா். இதுகுறித்து வார்னர் கூறுகையில் ‘‘இந்த வாரத்தில் அதிக ரன்கள் குவிக்க வேண்டும் என்ற நான் விரும்புகிறேன். இந்த வாரத்தில் சற்று நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து செய்தி மீடியாக்களில் வருகின்றன.

    ஸ்கோர் போர்டில் அதிக ரன்கள் வரவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஒரு இளைஞனாக செய்திதாள்களில் இருந்து நான் விலகியிருப்பேன். ரென்ஷா சிறப்பாக செயல்பட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் என்னுடன் களம் இறங்கும் வீரர். அதனால் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
    Next Story
    ×