search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு டி.என்.ஏ. உடற்தகுதி டெஸ்ட்
    X

    இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு டி.என்.ஏ. உடற்தகுதி டெஸ்ட்

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் ஒவ்வொரு கிரிக்கெட் வீரர்களுக்கும் டி.என்.ஏ. உடற்தகுதி டெஸ்ட் செய்யப்படுகிறது.
    சர்வதேச அளவில் இந்திய கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய அணி தொடர்ச்சியாக பல போட்டிகளில் தொடர்ச்சியாக விளையாடி வருவதால் வீரர்கள் அனைவரும் சிறந்த உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்று பிசிசிஐ விரும்புகிறது.

    இதற்கு முன் வீரர்கள் உடம்பில் கொழுப்பு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் வகையில் ஸ்கின்போல்ட் டெஸ்ட் செய்யப்பட்டது. இதற்கு நேரம் அதிகமானதால் டெக்சா பரிசோதனை (DEXA) செய்யப்பட்டது. சமீப காலமாக வீரர்களுக்கு யோ-யோ பரிசோதனை டெஸ்ட் செய்யப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்றால்தான் இந்திய அணிக்கு தகுதி பெறும்.

    இந்நிலையில் தற்போது பிசிசிஐ டி.என்.ஏ./மரபணு சோதனை என்பதை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த டெஸ்ட் வீரர்கள் தங்களது வேகத்தை அதிகரிக்க, கொழுப்பை குறைக்க, காயத்தில் இருந்து உடனடியாக மீண்டுவர உதவிகரமாக இருக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

    அமெரிக்காவில் நடைபெறும் புகழ்பெற்ற என்.பி.ஏ. விளையாட்டில் கலந்து கொள்ளும் வீரர்கள் இதுபோன்ற டி.என்.ஏ. பரிசோதனை செய்யப்படுகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் டிரைனர் ஷங்கர் பாசு கொடுத்த யோசனை மூலம் பிசிசிஐ இந்த சோதனையை நடைமுறைக்கு கொண்டு வந்ததுள்ளது.



    ‘‘டி.என்.ஏ. சோதனை இந்திய கிரிக்கெட் அணியில் தற்போது சில நேரங்களில் தொடங்கப்பட்டுள்ளது. இது இந்திய அணி நிர்வாகத்தால் கொண்டு வரப்பட்டுள்ள ஒரு புதிய பிட்னெஸ் அளவுகோல்.

    இந்த யோசனையை ஷங்கர் பாசு கொடுத்தார். இதன்மூலம் அதிகப்படியான நன்மை கிடைக்கிறது. ஒவ்வொரு வீரர்களுக்கும் இந்த டெஸ்ட் செய்யப்படுகிறது. இதற்கு 25 ஆயிரம் ரூபாய் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை ஆகிறது. இது பிசிசிஐயின் வரைமுறைக்குட்பட்ட தொகைதான்’’ பிசிசிஐ தெரிவித்துள்ளது.

    இந்த சோதனையின் மூலம் வீரர்கள் எதில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்பதை அறிந்து, அதற்கேற்ற வகையில் பயிற்சி கொடுக்கப்படும்.
    Next Story
    ×