search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்லோரும் விமர்சனம் செய்யலாம்: அதை மதிக்கனும் - டோனி பதில்
    X

    எல்லோரும் விமர்சனம் செய்யலாம்: அதை மதிக்கனும் - டோனி பதில்

    எல்லோருக்கும் கருத்து கூறும் உரிமை உண்டு. அதை நாம் மதிக்க வேண்டும் என தன்னுடைய விமர்சனத்திற்கு டோனி பதில் அளித்துள்ளார்.
    இந்திய கிரிக்கெட் அணியின் சாதனைக் கேப்டனாக திகழ்ந்தவர் மகேந்திர சிங் டோனி. டெஸ்ட் போட்டியில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்ற இவர், இந்த வருட தொடக்கத்தில் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் கேப்டன் பதவியில் இருந்து விலகினார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக திகழ்ந்து வருகிறார்.

    36 வயதாகும் டோனியால் சிலமுறை போட்டியை வெற்றிகரமாக முடிக்க முடியவில்லை. நியூசிலாந்துக்கு எதிரான 2-வது டி20 கிரிக்கெட் போட்டியின்போது இந்தியா 197 ரன்களை நோக்கி சேஸிங் செய்து கொண்டிருந்தது. தவான், ரோகித், பாண்டியாக சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்த பினனர், டோனி களம் இறங்கினார். இவர் அதிரடியாக விளையாடாமல் நிதானமாக விளையாடினார்.

    இதனால் டோனிக்கு எதிராக விமர்சனம் எழும்பியது. அஜித் அகர்கர், லஷ்மண் ஆகியோர் டோனி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள். அதேவேளையில் டோனி குறித்து விமர்சனத்திற்கு இந்திய அணி கேப்டன் விராட் கோலி, தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில் எல்லோரும் கருத்துக்கள் கூறலாம். அதற்கு நாம் மரியாதை கொடுக்க வேண்டும் என டோனி பதில் அளித்துள்ளார்.

    இதுகுறித்து டோனி கூறுகையில் ‘‘வாழ்க்கையில் எல்லோரும் கருத்துக்கள் கூறலாம். அதை நாம் மதிக்க வேண்டும். விளையாட்டு என்பது வாழ்க்கை பற்றி அறிவதற்கு ஒரு வழி என்று எப்போதுமே நான் நினைப்பதுண்டு.



    ஏமாற்றத்தை எப்படி எதிர்கொள்வது. வெற்றி தோல்வியின்போது மக்கள் முன் எப்படி தோன்றுவது என்பது முக்கியம். அதேவேளையில் விமர்சனம் மீதும் அதே நிலையில்தான் இருக்க வேண்டும். கற்றுக்கொள்வது, தங்களது ஆட்டத்திறனை வளர்த்துக் கொள்வது எப்படி என்பதில் திறந்த மனநிலையோடு இருக்க வேண்டும்.

    இந்திய அணிக்காக நான் விளையாடுவது எனக்கு மிகச்சிறந்த உத்வேகமாக இருக்கும். நான் ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமே விளையாடுகிறோம். அது ஒரு வருடத்தில் இருந்து 15 வருடம் அல்லது 20 வருடம் கூட இருக்கலாம். ஆனால், வாழ்க்கை என்பது 70 வருடம். 10 முதல் 15 வருடம் என்பது ஒன்றுமே இல்லை’’ என்றார்.
    Next Story
    ×