search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பகல்-இரவு பயிற்சி ஆட்டம்: ஆண்டர்சன், வோக்ஸ் பந்து வீச்சால் இங்கிலாந்து அசத்தல் வெற்றி
    X

    பகல்-இரவு பயிற்சி ஆட்டம்: ஆண்டர்சன், வோக்ஸ் பந்து வீச்சால் இங்கிலாந்து அசத்தல் வெற்றி

    கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிக்கெதிரான பகல்-இரவு பயிற்சி ஆட்டத்தில் ஆண்டர்சன், வோக்ஸ் பந்து வீச்சால் இங்கிலாந்து அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.
    இங்கிலாந்து - கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணிகளுக்கு இடையிலான நான்கு நாட்கள் கொண்ட பகல் - இரவு பிங்க் பந்து பயிற்சி ஆட்டம் கடந்த 8-ந்தேதி (புதன்கிழமை) அடிலெய்டு மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 95 ஓவரில் 293 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது. ஸ்டோன்மேன் (61), மாலன் (63), ஜோ ரூட் (58) ஆகியோர் அரைசதம் அடித்தனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியின் ஃபாலின்ஸ் ஐந்து விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் தொடங்கியது. க்ரேன் (3), ஆண்டர்சன் (2), வோக்ஸ் (2) பந்து வீச்சால் அந்த அணி 76 ஓவரில் 233 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.


    கிறிஸ் வோக்ஸ் உடன் ஆண்டர்சன்

    பின்னர் 60 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவனின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து 207 ரன்னில் சுருண்டது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ஸ்டோன் மேன் 51 ரன்னும், பேர்ஸ்டோவ் அவுட்டாகாமல் 61 ரன்னும் சேர்த்தனர். கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி சார்பில் மிலென்கோ அதிகபட்சமாக 5 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.


    ஓவர்டன்

    207 ரன்களில் சுருண்டதால் இங்கிலாந்து, கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணியின் வெற்றிக்கு 268 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    268 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளரான கிறிஸ் வோக்ஸின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.


    ஜேம்ஸ் ஆண்டர்சன்

    இதனால் நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 70 ரன்கள் எடுத்திருந்ததுரு. ஷார்ட் 28 ரன்களுடனும், சந்து 17 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். கிறிஸ் முதல் 4 ஓவருக்குள் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா லெவன் அணி மேலும் 5 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து 75 ரன்னில் ஆல்அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து 192 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    2-வது இன்னிங்சில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், கிறிஸ் வோக்ஸ் 4 விக்கெட்டும், ஓவர்டன் 3 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    இங்கிலாந்து விளையாடும் மூன்று நாட்கள் கொண்ட 3-வது பயிற்சி ஆட்டம் 15-ந்தேதி தொடங்குகிறது.
    Next Story
    ×